அரசியல் செய்தி

தமிழ்நாடு

" பெண்களின் உரிமைக்காக தொடர்ந்து போராடுவேன்" - கைதான குஷ்பு ஆவேசம்

Updated : அக் 27, 2020 | Added : அக் 27, 2020 | கருத்துகள் (30+ 22)
Share
Advertisement
சிதம்பரம்: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை கண்டித்து தடையை மீறி போராட்டம் செய்ய முயன்ற நடிகை குஷ்பு சென்னை அருகே கைது செய்யப்பட்டார்.பெண்களை இழிவாக பேசியதாக கூறி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரான திருமாவளவனை கண்டித்து சிதம்பரத்தில் இன்று (அக்.,27) பாஜ., மகளிரணி சார்பில் போராட்டம் நடைபெறுவதாக இருந்தது. அந்த போராட்டத்திற்கு காவல்துறை தடை

சிதம்பரம்: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை கண்டித்து தடையை மீறி போராட்டம் செய்ய முயன்ற நடிகை குஷ்பு சென்னை அருகே கைது செய்யப்பட்டார்.



latest tamil news



பெண்களை இழிவாக பேசியதாக கூறி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரான திருமாவளவனை கண்டித்து சிதம்பரத்தில் இன்று (அக்.,27) பாஜ., மகளிரணி சார்பில் போராட்டம் நடைபெறுவதாக இருந்தது. அந்த போராட்டத்திற்கு காவல்துறை தடை விதித்தது, பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்த சென்ற குஷ்பு, சென்னை அருகே முட்டுக்காடு என்ற இடத்தில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.


latest tamil news



கைது குறித்து டுவிட்டரில் குஷ்பு பதிவிட்டதாவது: பெண்களின் கவுரத்திற்காக எங்கள் கடைசி மூச்சுவரை தொடர்ந்து போராடுவோம். பிரதமர் மோடி எப்போதும் பாதுகாப்பு பற்றி பேசியுள்ளார். நாங்கள் அவருடைய பாதையில் நடக்கிறோம். அராஜகத்துக்கு நாங்கள் ஒருபோதும் தலைவணங்க மாட்டோம். இவ்வாறு அவர் பதிவிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (30+ 22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
27-அக்-202019:18:26 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN சிருத்தைக்கு விடுதலை கொடுத்ததே தப்புன்னு இப்போதான் தெரியுது.விடுதலை என்றால் என்னவென்றே தெரியாமல்பலர் உயிர்வாழ்கின்றனர். அவர்களுக்கு விடுதலை பற்றி எப்படி உணர்த்துவது.
Rate this:
Cancel
arasu -  ( Posted via: Dinamalar Android App )
27-அக்-202018:02:17 IST Report Abuse
arasu BJP என்றாலே இப்ப வந்த குஷ்பூ முருகன் அண்ணாமலை பெயர்கள் மட்டுமே varugirathu. ஒரிஜினல் பிஜேபியில் இருந்த இல கணேசன் பொன். ராதாகிருஷ்ணன் CP ராதாகிருஷ்ணன் வானதி ஸ்ரீனிவசன் H ராஜா இவர்களுக்கெல்லாம் ஓய்வு கொடுத்து விட்டார்களா
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
27-அக்-202019:41:55 IST Report Abuse
தமிழவேல் இப்போ போஸ்டர் சீசன்.......
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
27-அக்-202017:57:47 IST Report Abuse
தமிழவேல் எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்... அந்த ஆள், எதுலையோ "எதுவோ" எழுதி இருக்குன்னு சொல்றான். அந்த "எதுவோ"வை, இவன் சொன்னதா எப்புடி எடுத்துக்க முடியும் ? (அந்த "எதுவோ" உண்மையோ பொய்யோ அது வேற)
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X