ஒரு நாட்டுக்கு இரு கொடிகள் என்ற பேச்சுக்கே இடமில்லை: ரவிசங்கர் பிரசாத்

Updated : அக் 27, 2020 | Added : அக் 27, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
அவுரங்காபாத்: மெஹபூபா முப்தியின் காஷ்மீர் கொடி குறித்த பேச்சு குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ‛ஒரு நாட்டுக்கு இரு கொடிகள் என்ற பேச்சுக்கே இடமில்லை,' எனக் கூறினார்.காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி, கடந்த சில நாட்களுக்கு முன்னர், முதன்முறையாக, நிருபர்களை சந்தித்தபோது, ‛ஜம்மு - காஷ்மீருக்கு, சிறப்பு அந்தஸ்தின் கீழ்
காஷ்மீர், கொடி, ரவிசங்கர்பிரசாத், தேசியக்கொடி, மூவர்ணக்கொடி

அவுரங்காபாத்: மெஹபூபா முப்தியின் காஷ்மீர் கொடி குறித்த பேச்சு குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ‛ஒரு நாட்டுக்கு இரு கொடிகள் என்ற பேச்சுக்கே இடமில்லை,' எனக் கூறினார்.

காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி, கடந்த சில நாட்களுக்கு முன்னர், முதன்முறையாக, நிருபர்களை சந்தித்தபோது, ‛ஜம்மு - காஷ்மீருக்கு, சிறப்பு அந்தஸ்தின் கீழ் வழங்கப்பட்டிருந்த மாநிலக் கொடி மீட்கப்பட்டால் தான், இங்கு தேசியக் கொடி ஏற்றப்படும். அதன்பின் தான் தேசியக் கொடியை கையில் எடுப்பேன்,' எனக் கூறியிருந்தார். இவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவரை தேச விரோத சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என பா.ஜ., வலியுறுத்தியது.


latest tamil news



இந்நிலையில், பீஹார் மாநிலம் அவ்ரங்காபாத் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பாஜ., மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: பிரமாண்டமான ராமர் கோவில் கட்டும் பணிகள் தொடங்கிவிட்டது. இதில் சிலருக்கு பிரச்னை உள்ளது. அவர்களுக்கு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் 370 பிரிவு நீக்கப்பட்டதிலும் பிரச்னை உள்ளது. நான் ஒன்றை தெளிவாக கூறிக்கொள்கிறேன். ஒரு நாட்டில் இரண்டு பிரதமர்கள், இரண்டு கொடிகள் என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்திய மூவர்ணக்கொடிதான் அனைத்து பகுதிகளிலும் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
28-அக்-202005:39:45 IST Report Abuse
 Muruga Vel இந்த அம்மணி இந்திய பாஸ்போர்ட்டை திருப்பி கொடுத்து விட்டாரா ..இந்திய பணத்தை உபயோகிக்காமல் இருக்காரா ...
Rate this:
Cancel
Thirumurugan - Kuala Lumpur,மலேஷியா
27-அக்-202021:38:32 IST Report Abuse
Thirumurugan இந்த கருத்து அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் தானே...பிஜேபி ஆளும் கர்நாடகாவிற்கு தனியாக கொடி உள்ளதே ... அதுவும் தடை செய்யப்பட்ட வேண்டும் அல்லவா?
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
27-அக்-202016:45:31 IST Report Abuse
vnatarajan நாடு முழுவதுஇம் மூவர்ண கோடி ஒன்றுதான் தேசிய கொடியாகயிருக்கவேண்டும் அதை தவிர்த்து மாநிலங்களுக்குஎன்று ஒருகொடியை வைத்துக்கொள்ள தடை விதிக்கவேண்டும். தேவையானால் ஒரு சட்டமோ அல்லது சட்டதிருத்தமோ கொண்டுவரவேண்டும். இடதுவரை காங்கிரஸ் ஆட்சியில் இந்தவிவகாரங்களை கையில் எடுக்காமல் சும்மா இருந்துவிட்டார்கள். அதற்குரிய தைரியம் காங்கிரஸுக்கு இல்லாமல் போய்விட்டது. அவர்கள் செய்யாத காரியங்களை பிஜேபி துணிச்சலுடன் கையிலெடுத்து வெற்றியும் கண்டுள்ளது. இதுவரை மக்கள் பணத்தில் காஷ்மீரை ஆண்டவர்கள் தங்கள் சுய வசதிக்காக சுரண்டியது போதும். காங்கிரஸ் இதை கண்டுகொள்ளவே இல்லை. மெஹ்பூபாவின் பேச்சிற்கு ராகுலின் பதில் என்ன ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X