பொது செய்தி

இந்தியா

இந்திய, அமெரிக்க அமைச்சர்கள் டில்லியில் முக்கிய பேச்சு

Updated : அக் 27, 2020 | Added : அக் 27, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி : இந்தியா, அமெரிக்காவின் வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சர்களின் மாநாடு, டில்லியில் நடந்தது.இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவை மேம்படுத்தும் வகையில், இரு நாடுகளின் வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சர்களின் மாநாடு, 2018ல் இருந்து நடத்தப்பட்டு வருகிறது. மூன்றாம் மாநாடு, டில்லியில் இன்று நடந்தது. இதில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ, ராணுவ அமைச்சர் மார்க்
இந்தியா, அமெரிக்கா, அமைச்சர்கள், ஜெய்சங்கர்

புதுடில்லி : இந்தியா, அமெரிக்காவின் வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சர்களின் மாநாடு, டில்லியில் நடந்தது.

இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவை மேம்படுத்தும் வகையில், இரு நாடுகளின் வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சர்களின் மாநாடு, 2018ல் இருந்து நடத்தப்பட்டு வருகிறது. மூன்றாம் மாநாடு, டில்லியில் இன்று நடந்தது. இதில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ, ராணுவ அமைச்சர் மார்க் எஸ்பர் பங்கேற்றனர். இந்திய தரப்பில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றனர். இந்தியா - சீனா இடையே எல்லைப் பிரச்னை தீவிரமடைந்து உள்ளது. மேலும், தென் சீனக் கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்தும் சீனா, பல நாடுகளின் எல்லையை ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.


latest tamil news



அதேபோல், சீனா - அமெரிக்கா இடையே வர்த்தகப் போர் நடந்து வருகிறது. அதனால், அமைச்சர்கள் இடையேயான மாநாட்டின்போது, சீனா உடனான பிரச்னைகள் குறித்து பேசப்பட்டதாக எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில், நவ., 3ல் அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில், அமெரிக்க அமைச்சர்களின் வருகை, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


latest tamil news



இந்த கூட்டத்தில் நமது வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசும்போது, கடந்த பல ஆண்டுகளாக இரு நாடுகளுக்கு இடையிலான உறவு வளர்ந்து வருகிறது. சட்டத்தினால் ஆன சர்வதேச உத்தரவை உறுதி செய்யவும், சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்னைகளில் நாம் ஒன்று சேர்ந்து உண்மையான மாற்றத்தை ஏற்படுத்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce -  ( Posted via: Dinamalar Android App )
27-அக்-202014:23:41 IST Report Abuse
oce இரண்டு நாடுகளின் உறவை மேம்படுத்த மாநாடு நடத்துவது சரி.அதில் சீனாவின் பிரச்சனைகளால் உலக மக்கள் பொருளாதார முன்னேற்றம் பின் நோக்கி செல்வதை தடுப்பது பற்றி பேசுவது அவசியம். அவன் உலகத்திற்கு பல வகையிலும் தொந்தரவு கொடுத்து வருகிறான்.
Rate this:
Cancel
oce -  ( Posted via: Dinamalar Android App )
27-அக்-202014:10:22 IST Report Abuse
oce இரு நாடுகளும் இந்த நேரத்தில் எதைப்பற்றி பேச வேண்டும் என்பதற்கான அஜெண்டா இந்திய அமெரிக்க தினசரி நாளேடுகளில் வெளியிடப்பட்டதா. கும்பல் கூடி உட்கார்ந்த நாற்காலிகளை சூடாக்குவதில் பிரயோசனமில்லை.இரு நாடுகளும். சேர்ந்து ஜின் பிங் குரோனாவை பரப்பியதற்கான காரணத்தை கேட்க வேண்டும். கேட்டாலும் அந்த ஆள் பதில் சொல்ல மாட்டான்.இரு நாடுகளும் சேர்ந்து அடிக்கிற அடியில் உண்மையை கக்க வேண்டும். செய்வார்களா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X