பொது செய்தி

தமிழ்நாடு

'இன்று புதிதாய் பிறந்தோம்': சிகரத்தை நோக்கி இளைஞர் பட்டாளம்

Updated : அக் 27, 2020 | Added : அக் 27, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருப்பூர்: விஜயதசமி நாளில், வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன், திருப்பூரில், புதிய தொழில் முனைவில், இளைஞர்கள் பலர் களமிறங்கியுள்ளனர்.விஜயதசமி திருநாள், வெற்றியின் அடையாளமாக, கருதப்படுகிறது. விஜயதசமி திருநாளான நேற்று, திருப்பூரில், பல்வேறு புதிய தொழில் முயற்சிகளுக்கு, இளைஞர்கள் அடித்தளமிட்டுள்ளனர். சிறிய டீக்கடைகளில் இருந்து துவங்கி, ஜவுளி, எலக்ட்ரானிக்ஸ்
புதிதாய்பிறந்தோம், சிகரம், இளைஞர், பட்டாளம்

திருப்பூர்: விஜயதசமி நாளில், வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன், திருப்பூரில், புதிய தொழில் முனைவில், இளைஞர்கள் பலர் களமிறங்கியுள்ளனர்.

விஜயதசமி திருநாள், வெற்றியின் அடையாளமாக, கருதப்படுகிறது. விஜயதசமி திருநாளான நேற்று, திருப்பூரில், பல்வேறு புதிய தொழில் முயற்சிகளுக்கு, இளைஞர்கள் அடித்தளமிட்டுள்ளனர். சிறிய டீக்கடைகளில் இருந்து துவங்கி, ஜவுளி, எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனைக்கடைகள், பின்னலாடை மற்றும் சார் தொழிற்சாலைகள் என, புதிய நிறுவனங்கள், நேற்று, திருப்பூரில் உதயமாகியிருக்கின்றன.முதலீட்டு அளவில், சிறியனவாக இருந்தாலும், இவற்றைச் சாதித்துக்காட்டும் நோக்கில், துவக்கியிருப்பவர்களில், பெரும்பாலானோர் இளைஞர்களே.

புதிய தொழில்முனைவோர் கூறியதாவது: ஊரடங்கு காலத்தில், ஊரே முடங்கிக்கிடந்தாலும், தொழில் குறித்த சிந்தனையுடன் நாங்கள் இருந்தோம். சிறந்த தரம், நியாயமான விலையுடன் பொருட்களைக் கொடுத்தால், ஆர்டர்களைக் குறித்த நேரத்தில் முடிக்கும் திறனுடன் திகழ்ந்தால், எத்தகைய தொழிலிலும் வெற்றி பெற முடியும்.ஊரடங்கு தளர்வு காலம், தொழில் துவங்குவதற்குக் கடினமானது என்று பெரும்பாலானோர் கருதினாலும், எங்களை பொறுத்தவரை, இந்தத் தருணம் தான், தொழிலுக்கு அடித்தளமிடுவதற்கும், நிலை நிறுத்தவும் சிறந்தது என்பது எங்கள் நம்பிக்கையாக உள்ளது.முதலீட்டை மட்டுமே, தொழில் துவங்குவதற்கான ஆதாரமாக கருதாமல், தொழில் அனுபவத்தையும், கடின உழைப்பையும், நுணுக்கமான சிந்தனையையும் மூலதனமாக கருதுகிறோம். விஜயதசமி திருநாளில் துவங்கி, வெற்றிப்படிக்கட்டுகளை அமைப்போம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


latest tamil news



வங்கியினர் உதவி


தொழில் வல்லுனர்கள் கூறியதாவது:நாட்டில், இரண்டாம், மூன்றாம் தர நகரங்களில், 'ஸ்டார்ட் அப்'கள் அதிகம் துவங்கப்பட வேண்டும். இது நாட்டின் முன்னேற்றத் துக்கு சிறந்தது. திருப்பூர் போன்ற நகரங்கள், இதுபோன்ற 'ஸ்டார்ட் அப்'கள் துவங்குவதற்கு பொருத்தமானவை. இருப்பினும், 'ஸ்டார்ட் அப்' போன்ற முன்முயற்சி மற்றும் புதிய திட்டங்களில், களமிறங்குவதற்கு, இளைஞர்கள் பலர் தயங்கும் நிலை உள்ளது. வேலை பார்ப்பது 'ரிஸ்க்' இல்லாதது என்று இவர்கள் கருதுகின்றனர். இதனால், ஒரு கட்டத்தில் இருந்து அடுத்த கட்டத்திற்கு, பொருளாதார ரீதியாக, இவர்களால், நகர முடிவதில்லை.பெரும் முன்னேற்றத்தைக் காட்ட இயல்வதில்லை. சிறியதாக இருந்தாலும், துணிவுடன் தொழிலுக்கான முன்முயற்சிகளில், இளைஞர்கள் கால்பதிக்க வேண்டும். இதற்கேற்ற வகையில், மத்திய, மாநில அரசுகளின் ஆதரவு இருக்கிறது. வங்கிகளும் உதவுகின்றன. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vagheesh s - Thiruvarur,இந்தியா
27-அக்-202012:02:49 IST Report Abuse
Vagheesh s vazhththukkal
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X