புனேயில் ரூ.2.35 லட்சம் மதிப்புள்ள வெங்காயம் திருட்டு: 4 பேர் கைது

Updated : அக் 27, 2020 | Added : அக் 27, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
புனே: புனேயில் ரூ.2.35 லட்சம் மதிப்புள்ள 58 வெங்காய மூடைகளை திருடிச்சென்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.நாடு முழுவதும் வெங்காயம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ வெங்காயம் ரூ.75க்கு மேல் அதிகரித்துள்ளது. அதிகளவு மழை, பதுக்கல் காரணமாக இந்த விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வெங்காயம் விலையை கண்டு கண்ணீர் வடிக்கும் குடும்ப பெண்கள், எப்போது குறையும் என
StealOnions, Pune, Farmer, 4Men, Arrested, Onion, வெங்காயம், திருட்டு, புனே, 4பேர், கைது

புனே: புனேயில் ரூ.2.35 லட்சம் மதிப்புள்ள 58 வெங்காய மூடைகளை திருடிச்சென்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாடு முழுவதும் வெங்காயம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ வெங்காயம் ரூ.75க்கு மேல் அதிகரித்துள்ளது. அதிகளவு மழை, பதுக்கல் காரணமாக இந்த விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வெங்காயம் விலையை கண்டு கண்ணீர் வடிக்கும் குடும்ப பெண்கள், எப்போது குறையும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தங்கம் விலையேற்றத்திற்கு இணையாக வெங்காயத்தை ஒப்பிடும் அளவிற்கு விலையேற்றம் இருப்பதால், பல இடங்களில் திருட்டும் தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் 58 வெங்காய மூடைகளை திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


latest tamil news


புனேயில் கடந்த 21ம் தேதி, விவசாயி ஒருவரிடம் 4 பேர் கொண்ட திருட்டுக் குழு, ரூ.2.35 லட்சம் மதிப்பிலான 58 வெங்காய மூடைகளை திருடியுள்ளது. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், வெங்காயத்தை திருடி சென்ற 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள 49 மூடைகள் கைப்பற்றப்பட்டதாகவும், மீதமுள்ள மூடைகள் ஏற்கனவே திருடர்கள் விற்றுவிட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
27-அக்-202023:09:34 IST Report Abuse
தமிழவேல் 58 இல் 49 தான் பிடிபட்டிருக்காம்... பாக்கி வித்துட்டாங்களாம்.
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
27-அக்-202021:09:21 IST Report Abuse
A.George Alphonse ஒவ்வொரு ஆண்டும் இதே நாட்களில் மக்களை இந்த ராக்கெட் வேகமும்,உயரமும் உள்ள வெங்காய விலையால் மக்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்.அரசு ஏன் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வெங்கயாத்தை குடோனில் இந்த நாட்களில் காப்பாற்றி வைத்து மக்களின் கண்ணீரை துடைக்க மறந்து விடுகிறது. வெங்காய
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
27-அக்-202023:11:16 IST Report Abuse
தமிழவேல் 3 மாசத்துக்குமேலபோனா முளை விட்டுடும்......
Rate this:
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
28-அக்-202007:46:28 IST Report Abuse
A.George Alphonseஅப்படியா...
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
27-அக்-202016:08:29 IST Report Abuse
Endrum Indian 2.35 லட்சம் கோடி திருடினானே அவனை ஏன்பா அர்ரெஸ்ட் பண்ணல வெறும் 2.35 லட்சம் அர்ரெஸ்ட்டா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X