அரசியல் செய்தி

தமிழ்நாடு

தந்தையை விமர்சிப்பதா ? கோவையில் உதயநிதி ஆர்ப்பாட்டம்

Updated : அக் 27, 2020 | Added : அக் 27, 2020 | கருத்துகள் (124)
Share
Advertisement
கோவை: கோவையில் தி.மு.க., தலைவர் ஸ்டாலினை விமர்சித்து போஸ்டர் ஒட்டப்பட்டதை கண்டித்தும், அமைச்சர் வேலுமணியை கண்டித்தும், இளைஞரணி செயலாளர் உதயநிதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.தி.மு.க., தலைவர் ஸ்டாலினை விமர்சித்தும், 23ம் புலிகேசி போன்று சித்தரித்தும் கோவை முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க.,வினர் போஸ்டர்களை கிழித்தனர்.
உதயநிதி, ஸ்டாலின், திமுக, தி.மு.க.,

கோவை: கோவையில் தி.மு.க., தலைவர் ஸ்டாலினை விமர்சித்து போஸ்டர் ஒட்டப்பட்டதை கண்டித்தும், அமைச்சர் வேலுமணியை கண்டித்தும், இளைஞரணி செயலாளர் உதயநிதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தி.மு.க., தலைவர் ஸ்டாலினை விமர்சித்தும், 23ம் புலிகேசி போன்று சித்தரித்தும் கோவை முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க.,வினர் போஸ்டர்களை கிழித்தனர். இதனால் தி.மு.க.,வினருக்கும், அ.தி.மு.க.,வினருக்கும் இடையே கடுமையான கைகலப்பு ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் தி.மு.க.,வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை கண்டித்தும், ஸ்டாலினை விமர்சனம் செய்து போஸ்டர் ஒட்டப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அமைச்சர் வேலுமணியை கண்டித்தும், கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு தி.மு.க.,வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அக்கட்சியின் இளைஞரணி செயலர் உதயநிதி தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. 300 பெண்கள் உட்பட 1,500 பேர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

மாநில இளைஞரணி செயலர் உதயநிதி பேசியதாவது: அமைச்சர் வேலுமணியை கண்டித்து ஆர்ப்பாட்டம் எனக்கூறி வந்தோம். இது போராட்டமாக மாறியுள்ளது. 10 ஆண்டுகளாக வேலுமணி அடிக்காத கொள்ளை இல்லை. அவர் வேலுமணி இல்லை. பிளாக்மணி. வரும் தேர்தலில், அவருக்கு மக்கள் நல்ல விலை கொடுக்க தயாராகிவிட்டனர்.


latest tamil news



கீழ்த்தரமான அரசியல் செய்து, அநாகரீகமாக போஸ்டர் ஒட்டியுள்ளனர். பெயரை போடாமல் போஸ்டர் அடித்தது சட்டப்படி தவறு. பெயரை போட்டு அச்சடிக்க தைரியமில்லை. நீங்கள் எல்லாம் அமைச்சர். இதைவிட அசிங்கமாக , சிறப்பாக போஸ்டர் ஒட்டுவதற்கு எங்களுக்கு தெரியும். எங்களிடமும் போஸ்டர் தயாராக உள்ளது. நீங்கள் ஒட்டினால், நாங்களும் ஒட்ட தயாராக உள்ளோம்.

தமிழகத்தின் உரிமையை அதிமுக அரசு விட்டு கொடுத்து வருகிறது. கொரோனாவை விட மாட்டோம் எனக்கூறினார்கள். ஆனால், தமிழகத்தில் கொரோனாவை விட மோசமான ஆட்சி நடக்கிறது. பிளீச்சிங் பவுடர் முதல் மாஸ்க் வரை உள்ளாட்சி துறையில் ஊழல் நடக்கிறது.6 மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். எடப்பாடியும், வேலுமணியும் கம்பி எண்ணப்போவது உறுதி. இவ்வாறு அவர் பேசினார்

Advertisement




வாசகர் கருத்து (124)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dina - chennai,இந்தியா
02-நவ-202020:20:19 IST Report Abuse
dina உங்கப்பா என்ன பெரிய சுதந்திர போராட்ட தியாகியா திருட்டு தீமுகவின் தலைவன் அவ்வளவுதான்.
Rate this:
Cancel
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
28-அக்-202011:20:41 IST Report Abuse
Swaminathan Chandramouli எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் மீது எதற்க்காக சட்டநடவடிக்கை எடுக்கவில்லை ? ஆயிரக்கணக்கான திமுக ஆட்கள் அத்து மீறி நடு சாலையில் போராட்டம் நடத்தினார்கள் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக அரசை எதிர்த்து ஆபாசமாக கோஷம் போட்டார்கள் அவர்களை கைது செய்யவில்லை ஆனால் கொத்து கொத்தாக பிஜேபி தொண்டர்களை கைது செய்தார் எடப்பாடி
Rate this:
Cancel
AkbarAntony - Chennai,இந்தியா
28-அக்-202001:24:36 IST Report Abuse
AkbarAntony ஸ்டாலின் மகன் உதயநிதி அவர் அப்பாவுக்கு மேல் இருப்பார் போல, இவர் அறிவில் ஜூனியர் ராகுல் காந்தி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X