பொது செய்தி

இந்தியா

டில்லியில் காற்றுமாசை கட்டுப்படுத்த புதிய சட்டம்: மத்திய அரசு முடிவு

Updated : அக் 27, 2020 | Added : அக் 27, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: டில்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர உள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் உயரதிகாரி தெரிவித்தார்.டில்லியில் தொடர்ந்து காற்று மாசு மிகவும் அதிகமாக உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரித்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா, ‛அண்டை
டில்லி, காற்றுமாசு, புதியசட்டம், மத்தியஅரசு

புதுடில்லி: டில்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர உள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் உயரதிகாரி தெரிவித்தார்.

டில்லியில் தொடர்ந்து காற்று மாசு மிகவும் அதிகமாக உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரித்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா, ‛அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநில விவசாய நிலங்களில் பயிர் கழிவுகளை எரிப்பதால்தான் காற்று மாசு அதிகமாகிறதா என்பது குறித்து, சிறந்த முறையில் கண்காணித்து கட்டுப்படுத்த விரிவான சட்டத்தை மத்திய அரசு விரைவில் கொண்டு வரவுள்ளது,' என தெரிவித்தார்.


latest tamil news


இது குறித்து சுற்றுச்சூழல் செயலாளர் ஆர்.பி.குப்தா, பி.டி.ஐ., அளித்த பேட்டியில் கூறியதாவது: டில்லியில் தொடர்ந்து அதிகரித்து வரும் மாசுபாட்டைத் தொடர்ந்து கொண்டு வருவதால், நகரத்தில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய சட்டத்தை விரைவில் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த புதிய சட்டம் டில்லி மற்றும் என்.சி.ஆர்., பகுதிகளுக்கு மட்டுமே இருக்கும். இச்சட்டத்தால் விதிக்கப்படும் அபராதம் குறித்து என்னால் கருத்து தெரிவிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
27-அக்-202022:40:16 IST Report Abuse
Loganathan Kuttuva விவசாய கழிவுகளை உரமாக மாற்ற ஆவண செய்ய வேண்டும்.
Rate this:
Cancel
27-அக்-202017:15:08 IST Report Abuse
ஆப்பு விவசாய மசோதாவை எதிர்க்கும் பஞ்சாபில் விவசாயத்துக்கு தடை போட்டுரலாம். மசோதாவும் வெற்றி பெறும். டில்லி பொல்யூஷனும் குறையும்.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
27-அக்-202013:39:06 IST Report Abuse
Lion Drsekar டெல்லியில் மாசு குப்பைகளைக் கொளுத்துவதால் வருகிறது, ஆனால் சென்னையில் இதைவிட மிக அதிக அளவில் மாசு இருப்பதை யாருமே கண்டுகொள்வதே இல்லை, இன்றைக்கு எப்படி வேட்டை துடைப்பம் கொண்டு சுத்தம் செய்ய்றோமோ அதுபோல் ரோட்டையும் தாய்மார்கள் பெறுகிறார்கள் அதனால் நாம் தப்பித்தோம், இல்லையென்றால் அதோகதிதான், சுவாசிக்கும் காற்று முழுவதும் குப்பைகளில் இருந்து மற்றும் சாக்கடைக்கு கழிவுகளில் இருந்து ஓடும் சாக்கடை நீரில் கலந்து குப்பையாகி, புழுதியாகி காற்றில் பறக்கிறது, நாம் சுவாசிக்கும் காற்று மிகவும் ஆபத்தானது, சீனாவில் இருந்து கொரோனாபோல் சென்னையில் இருந்து ஒரு புது வியாதி உலகுக்கு பரவினாலும் பரவும் அளவுக்கு எல்லா இடங்களிலும் மாசு அடைந்துள்ளது, மிக மிக பொறுமையாக , சுத்தமாக அலாக்காக பணியாற்றும் தாய்மார்களுக்கு சென்னைவாசிகள் இருகரம் கூப்பி தினமும் வணங்கவேண்டும், நம்மைக் காக்கும் கடவுள்கள், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X