ஹத்ராஸ் பலாத்கார வழக்கை அலகாபாத் உயர்நீதிமன்றம் கண்காணிக்க உத்தரவு

Updated : அக் 27, 2020 | Added : அக் 27, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: ஹத்ராஸ் பலாத்கார வழக்கை கண்காணிக்க அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.உ.பி., மாநிலம் ஹத்ராஸில் இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டார். இதில், பலத்த காயமடைந்த அந்த பெண் டில்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாடு முழுவதும், இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உ.பி.,யில்
ஹத்ராஸ், உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம், சிபிஐ,

புதுடில்லி: ஹத்ராஸ் பலாத்கார வழக்கை கண்காணிக்க அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உ.பி., மாநிலம் ஹத்ராஸில் இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டார். இதில், பலத்த காயமடைந்த அந்த பெண் டில்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாடு முழுவதும், இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உ.பி.,யில் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த வழக்கை கண்காணிக்க வேண்டும், விசாரணையை உ.பி.,யில் இருந்து வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் எனக்கூறி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை தலைமை நீதிபதி பாப்தே தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு விசாரணை நடத்தியது. இந்த அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: ஹத்ராஸ் பாலியல் வழக்கு விசாரணையை அலகாபாத் உயர்நீதிமன்றம் கண்காணிக்கும். இந்த வழக்கை டில்லி மாற்றுவது குறித்து கவனிக்கப்பட வேண்டியது என்றாலும், இது குறித்து சி.பி.ஐ., விசாரணை முடிந்த பின்னர் முடிவு செய்யலாம்.


latest tamil news



இளம்பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து, அலகாபாத் உயர்நீதிமன்றம் முடிவு செய்யும். இந்த வழக்கு குறித்த விசாரணை அறிக்கையை அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ., தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
27-அக்-202015:34:14 IST Report Abuse
தமிழவேல் இதுக்கு கால நிர்ணயம் ஏதாவது செய்தாங்களான்னு தெரியலியே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X