அரசியல் செய்தி

தமிழ்நாடு

போஸ்டர் அரசியல் செய்கிறாரா பழனிச்சாமி ? டுவிட்டரில் டிரெண்டிங்

Updated : அக் 28, 2020 | Added : அக் 27, 2020 | கருத்துகள் (57)
Share
Advertisement
சென்னை : திமுக., தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டர் விவகாரம் தொடர்பாக முதல்வர் பழனிசாமியை விமர்சித்து சமூகவலைதளத்தில் #போஸ்டர்பழனிச்சாமி என்ற ஹேஷ்டாக் டிரெண்ட் ஆனது.தி.மு.க., தலைவர் ஸ்டாலினை விமர்சித்தும், 23ம் புலிகேசி போன்று சித்தரித்தும் கோவை முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க.,வினர் போஸ்டர்களை

சென்னை : திமுக., தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டர் விவகாரம் தொடர்பாக முதல்வர் பழனிசாமியை விமர்சித்து சமூகவலைதளத்தில் #போஸ்டர்பழனிச்சாமி என்ற ஹேஷ்டாக் டிரெண்ட் ஆனது.latest tamil news
தி.மு.க., தலைவர் ஸ்டாலினை விமர்சித்தும், 23ம் புலிகேசி போன்று சித்தரித்தும் கோவை முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க.,வினர் போஸ்டர்களை கிழித்தனர். இதனால் தி.மு.க.,வினருக்கும், அ.தி.மு.க.,வினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் தி.மு.க.,வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை கண்டித்து திமுக., சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. திமுக., இளைஞரணி செயலர் உதயநிதி இதற்கு தலைமை தாங்கினார்.


latest tamil news
''கீழ்த்தரமான அரசியல் செய்து, அநாகரீகமாக போஸ்டர் ஒட்டியுள்ளனர். பெயரை போட்டு அச்சடிக்க தைரியமில்லை. நீங்கள் எல்லாம் அமைச்சர். இதைவிட அசிங்கமாக , சிறப்பாக போஸ்டர் ஒட்டுவதற்கு எங்களுக்கு தெரியும். பிளீச்சிங் பவுடர் முதல் மாஸ்க் வரை உள்ளாட்சி துறையில் ஊழல் நடக்கிறது. 6 மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். பழனிசாமியும், வேலுமணியும் கம்பி எண்ணப்போவது உறுதி'' என ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி பேசினார்.

இந்த விஷயம் சமூகவலைதளங்களில் டிரெண்ட் ஆனது. ''தமிழகம் பல பிரச்னைகளை சந்தித்து கொண்டிருக்கிறது. அதிமுக., அரசு அதை கவனிக்காமல் போஸ்டர் அரசியல் செய்கிறது'' என கூறி #போஸ்டர்பழனிச்சாமி என்ற பெயரில் பலரும் டுவிட்டரில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதனால் டுவிட்டரில் #போஸ்டர்பழனிச்சாமி என்ற ஹேஷ்டாக் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது. மேலும் முதல்வரை விமர்சித்து கேலிச்சித்திரங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAVINDRAN - CHENNAI,இந்தியா
28-அக்-202014:44:14 IST Report Abuse
RAVINDRAN ஹிந்துக்கள் எல்லாம் தமிழனே இல்லை என ஒரு சொரியாரிஸ்ட் ஓசி பிரியாணி குரூப் முடியாத விடியாத பாமர பிகு செல்வம் தோல்வி கோடி செல்வம் 180 நிச்சயம் தமிழ் என வெவேறு போலி பெயரில் வந்து கருது போடுவானுக செம்ம காமெடி.இந்த கூட்டத்துக்கு அரேபியா மதமும் ஐரோப் இறக்குமதி செய்த MADHATHIL உள்ளவர்கள் மட்டுமே தமிழர்கள்.என்ன கேவலம் இப்படிய மூளை இல்லாம அலைவானுக..அப்போ இங்கேயே பிறந்து வளர்ந்து பல்லாயிரக்கணக்கான வருடமாக வாழும் குடும்பங்கள் ஹிந்து கடவுளை வழிபட்டால் அவர்கள் தமிழர்கள் இல்லை இந்த திருட்டு தியமுக்கவுக்கு.அதனால்தான் ஹிந்து என்றல் திருடன் என கட்டுமரம் கண்டு பிடித்தார்.இந்த திருட்டு தியமுக்கவுக்கு வோட்டு போடும் அல்லது அந்த கட்சியில் இருக்கும் ஹிந்துக்களை விட கேவலமான ஜென்மங்கள் உலகில் எங்கும் பார்க்க முடியாது.
Rate this:
Cancel
28-அக்-202014:44:02 IST Report Abuse
மாலதி, கோவை இந்த சமூக இடைவெளி பத்தி தெரியுமாங்கையா?
Rate this:
Cancel
veeramani - karaikudi,இந்தியா
28-அக்-202014:28:10 IST Report Abuse
veeramani சூரிய கட்சியில் செய்யாத தில்லுமுல்லுகளா. அவர்களின் தெரு பேச்சாளர்கள் தீ ஆறுமுகம் பேசாத பேச்சா ?? இதற்கு தமிழ் இலக்கனாம் இல்லை. மற்றவர்களை குறைகூறும் முன்பாக தனது ...சிந்திக்கவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X