இந்திய ஜனநாயகம் நடுவீதிக்கு வந்துள்ளது: சோனியா விமர்சனம்

Updated : அக் 27, 2020 | Added : அக் 27, 2020 | கருத்துகள் (70)
Share
Advertisement
புதுடில்லி: இந்திய ஜனநாயகம் நடுவீதிக்கு வந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் சோனியா விமர்சித்துள்ளார்.காங்., இடைக்காலத் தலைவர் சோனியா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் இப்போது நடு வீதிக்கு வந்திருக்கிறது. அதன் பொருளாதாரமும் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியிருப்பது தெளிவாகத் தெரிகிறது. ஜனநாயகத்தின் அனைத்து தூண்களும் தாக்குதலுக்கு
IndianDemocracy, InMiddle, Sonia, Attacks, Modi, Govt, சோனியா, இந்தியா, ஜனநாயகம்

புதுடில்லி: இந்திய ஜனநாயகம் நடுவீதிக்கு வந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் சோனியா விமர்சித்துள்ளார்.

காங்., இடைக்காலத் தலைவர் சோனியா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் இப்போது நடு வீதிக்கு வந்திருக்கிறது. அதன் பொருளாதாரமும் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியிருப்பது தெளிவாகத் தெரிகிறது. ஜனநாயகத்தின் அனைத்து தூண்களும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. எதிர்ப்புகள் அனைத்தும் பயங்கரவாதம் அல்லது தேச விரோத செயல் என்ற பெயரில் ஒடுக்கப்பட்டு ஜனநாயகம் வெற்றிடமாக்கப்பட்டுள்ளது. தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற போலியான அறிவிப்புகளின் மூலம் மக்களின் உண்மையான பிரச்னைகளின் மீதான மாநிலங்களின் கவனம் திசைதிருப்பப்படுகின்றன.


latest tamil news


அமலாக்கத்துறை, சிபிஐ, என்ஐஏ மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு என அனைத்து அமைப்புகளும் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய மாநில அதிகாரங்களைப் பயன்படுத்தும்போது அரசியலமைப்பு விதிகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும். ஆனால், இவற்றை மோடி அரசு பின்பற்றுவதில்லை. இது குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிரான போராட்டங்கள் மீதான நடவடிக்கைகள் மூலம் தெளிவாக வெளிப்பட்டன. பா.ஜ., எதிர்ப்பு போராட்டங்கள் அனைத்தும் தேச துரோக குற்றங்களாக முத்திரை குத்தப்பட்டன. சிஏஏ, என்ஊ்சி (தேசிய மக்கள்தொகை பதிவேடு) ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களுக்கு பெருமளவில் மக்கள் ஆதரவு கிடைத்தபோதும், மோடி அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை.

மாறாக, அதை டில்லி தோ்தலில் பிரிவினை அரசியலுக்கான ஆயுதமாக பாஜ., பயன்படுத்தியது. வாக்களித்த ஒரு கட்சி தோ்தலில் தோற்றுவிட்டால் அக்கட்சிக்கு வாக்களித்த மக்கள் அனைவரும் குடிமக்கள் இல்லை என்றாகிவிடாது. பிரதமர் மோடி, தனது பேச்சுகளில் 130 கோடி இந்திய மக்கள் என்று அடிக்கடி குறிப்பிடுகிறார். ஆனால், அவருடைய அரசு, அவர்களுக்கு வாக்களிக்காதவர்களை இரண்டாம்தர குடிமக்களாக நடத்துகின்றது. குடிமக்கள்தான் நாடு. அவர்களுக்கு சேவை செய்வதுதான் அரசின் கடமை. அரசமைப்பில் கூறியுள்ளபடி ஜனநாயகம் பின்பற்றப்பட்டால் மட்டுமே நாடு செழிக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (70)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumaresan - Petaling Jaya,மலேஷியா
28-அக்-202006:36:41 IST Report Abuse
kumaresan ஆனால் உங்க மற்றும் சகாக்களின் கஜானா காய்ந்து வருதுல்ல ஏமாற்று பேர்வழிகள் எல்லாம் கைது செய்யப்படுகின்றனர் அல்லவா
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
28-அக்-202005:59:59 IST Report Abuse
Indhuindian நடு வீதி எவ்வளவோ தேவல உங்க அத கஷிபறிக்குன்னா தள்ளினாங்க
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
28-அக்-202005:54:18 IST Report Abuse
Indhuindian அவசரநிலை பிரகடனத்துலே ஜனாதிபதி எங்கேந்து கையெஷுது போட்டர்ன்னு சொல்லுங்களேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X