பொது செய்தி

இந்தியா

மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவுக்கு கொரோனா

Updated : அக் 27, 2020 | Added : அக் 27, 2020
Share
Advertisement
மும்பை: மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வலேவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சரும், இந்திய குடியரசு கட்சி தலைவருமான ராம்தாஸ் அத்வாலே. நேற்று, நடிகை பாயல் கோஷ், இந்திய குடியரசு கட்சியில் இணையும் நிகழ்ச்சியில் அத்வாலே பங்கேற்றார். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். நேற்று இருமலுடன் உடல்
Union Minister, Ramdas Athawale, COVID-19, Positive, Mumbai, ராம்தாஸ் அத்வாலே, கொரோனா, கோவிட்-19,

மும்பை: மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வலேவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சரும், இந்திய குடியரசு கட்சி தலைவருமான ராம்தாஸ் அத்வாலே. நேற்று, நடிகை பாயல் கோஷ், இந்திய குடியரசு கட்சியில் இணையும் நிகழ்ச்சியில் அத்வாலே பங்கேற்றார். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். நேற்று இருமலுடன் உடல் வலி ஏற்பட்டது. இதனையடுத்து தானாக முன்வந்து அவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில், அவருக்கு தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


latest tamil news





மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கடந்த பிப்., 20 ம் தேதி மும்பையில் நடந்த பிரார்த்தனை கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் பல வெளிநாட்டவர்களும் கலந்து கொண்டனர். அவர்களுடன் சீன நாட்டு தூதரக அதிகாரிகள், புத்த மத துறவிகள் என பலரும் கலந்து கொண்டனர். அப்போது கொரோனா எதிர்ப்பு நடவடிக்கையாக கோ கொரோனா என கோஷம் எழுப்பினர். அவர்களுடன் அத்வாலேவும் கோஷமிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X