இந்திய பெண்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய டிரம்ப்

Updated : அக் 27, 2020 | Added : அக் 27, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்காவில் வரும் நவம்பர் 3-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத்தொடர்ந்து அங்கு தீவிர தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.ஜனநாயக கட்சியும் குடியரசு கட்சியும் தங்கள் வேட்பாளர்களை முன்னிறுத்தி தேர்தலின் இறுதி வாரமான தற்போது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க பெண்கள்
DonaldTrump, HinduAmerican, Women, Republicans, டிரம்ப்,

வாஷிங்டன்: அமெரிக்காவில் வரும் நவம்பர் 3-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத்தொடர்ந்து அங்கு தீவிர தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

ஜனநாயக கட்சியும் குடியரசு கட்சியும் தங்கள் வேட்பாளர்களை முன்னிறுத்தி தேர்தலின் இறுதி வாரமான தற்போது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க பெண்கள் கலந்து கொள்ளும் ஆன்லைன் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அமெரிக்காவில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசித்து வருகின்றனர். குடியரசு கட்சியில் இந்தியர்கள் பலர் பணியாற்றி வருகின்றனர். நவம்பர் 3 தேர்தலில் வெற்றிபெற இந்தியாவை பூர்வீகமாக கொண்ட குடியரசுக் கட்சியை ஆதரிக்கும் பெண்களின் ஆதரவு தனக்கு எப்போதும் வேண்டும் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.


latest tamil news


இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட பல தொழிலதிபர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். டல்லாஸ் பகுதியைச் சேர்ந்த இந்திய பூர்வீகம் கொண்ட பெண் தொழிலதிபரான கரிஷ்மா ஹிம்மத்சிங்கனி. டிரம்ப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் இவர் கூறுகையில், தான் வலதுசாரியும் இல்லை, இடதுசாரியம் இல்லை. தான் ஒரு மிதமான நடுநிலைவாதி என என்பதால் டொனால்ட் டிரம்ப் ஆதரவு அளிப்பதாகக் கூறியுள்ளார்.

இதேபோல பல்வேறு துறைகளில் சாதித்த இந்திய பூர்வீகம் கொண்ட அமெரிக்க பெண்கள் டிரம்ப்புக்கு தாங்கள் எதற்காக ஆதரவு தெரிவிக்கிறோம் என ஆன்லைன் கூட்டத்தில் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். இந்தியர்களின் வாக்குகளை ஜனநாயக கட்சியும் குடியரசு கட்சியும் முக்கியமாக கருதுகின்றன. இதனாலேயே அவர்களது வாக்குகளை பெறுவதற்காக தேர்தல் பிரச்சாரத்தில் டிரம்ப் அதிக முக்கியத்துவம் அளிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
28-அக்-202005:38:01 IST Report Abuse
 Muruga Vel கமலா ஹாரிஸ் பூர்வீக கிராமம் துளசேந்திரபுரத்தில் மெயின் ரோடு கிராம நுழைவு வாயிலில் அவருக்கு கட்டவுட் வைத்து வெற்றி பெற வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள் ..இந்த செய்தியை நேற்று படத்துடன் வெளியிட்டிருக்கிறது பாகிஸ்தான் நாளிதழ் டான் ... இந்திய பத்திரிக்கைகளில் காணோம் ..
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
28-அக்-202004:09:52 IST Report Abuse
J.V. Iyer ட்ரம்ப் மீண்டும் வந்தால் உலகத்திற்கு நல்லது. வருவாரா?
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
27-அக்-202022:38:08 IST Report Abuse
Ramesh Sargam "வொவொரு ஆணின் வெற்றிக்குப்பின்னும் ஒரு பெண் இருப்பாள்" ஆனால், டிரம்ப் கொடுத்துவைத்தவர், ஒரு பெண் கும்பலே இருக்கு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X