அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேர்தல் நேரத்தில் சிலருக்கு கடவுள் தேவைப்படுகிறார்: குஷ்பு

Updated : அக் 27, 2020 | Added : அக் 27, 2020 | கருத்துகள் (18+ 33)
Share
Advertisement
சென்னை: தேர்தல் நெருங்கும் நேரத்தில் மட்டும் சிலருக்கு கடவுள் தேவைப்படுகிறார் என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.பெண்களை இழிவாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவனை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க கிளம்பிய குஷ்புவை, சென்னை அருகே முட்டுக்காடு என்ற
குஷ்பு, திருமாவளவன், Kushboo, bjp,

சென்னை: தேர்தல் நெருங்கும் நேரத்தில் மட்டும் சிலருக்கு கடவுள் தேவைப்படுகிறார் என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

பெண்களை இழிவாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவனை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க கிளம்பிய குஷ்புவை, சென்னை அருகே முட்டுக்காடு என்ற இடத்தில் போலீசார் கைது செய்தனர். பின்னர் மாலையில் விடுவித்தனர்.

அப்போது நிருபர்களை சந்தித்த குஷ்பு கூறியதாவது: கடலூர் வரை போக வாய்ப்பு கொடுப்பார்கள் என நினைத்தோம். தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்துள்ளது. இது கட்சி ரீதியிலான போராட்டம் அல்ல. ஒரு பெண் என்ற ரீதியில் போராட வந்துள்ளேன். பெண்களை மதிக்கும் இடத்தில் கடவுள் இருப்பார். மதிக்காத இடத்தில் இருக்க மாட்டார். கொள்கைகளை வீட்டில் இருந்து துவங்க வேண்டும். தேர்தல் நேரத்தில் மட்டும் சிலருக்கு கடவுள் தேவைப்படுகிறார்.


latest tamil news



பெண்களை பற்றி இழிவாக பேசியதால் தான் திருமாவளவனுக்கு எதிராக போராட்டம் நடத்தினோம். மனுதர்மத்தில் பெண்களை உயர்வாக பேசிய பகுதிகள் திருமாவளவனுக்கு தெரியவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பாக ஆண்கள் இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. தேர்தல் வரப்போகிறது. பா.ஜ., மீது எந்த குற்றமும் சொல்ல முடியாது. பெண்களை மதிக்க அனைவரும் கற்று கொள்ள வேண்டும். ஏதோ ஒரு பிரச்னை உருவாக்க வாய்ப்பு உள்ளது. எனவே நாங்கள் கைது செய்யப்பட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (18+ 33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
27-அக்-202023:02:59 IST Report Abuse
Ramki குருமாவிற்கு பயந்து அக்கருங்காலிக்கு ஒத்து ஊதும் எடப்பாடியார் வீட்டிலுள்ள பெண்டிரும் குருமா உரைத்த அதே ....சாரிகள் தான் போலும். அதனால்தான் கைது செய்ய ஆர்ப்பாட்டம் செய்தும் ஆணையிடாதது.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
27-அக்-202022:40:02 IST Report Abuse
Ramesh Sargam "நிறம் மாறிய பச்சோந்நதி, சாரி, கட்சி மாறிய குஷ்பூ நன்றாகவே வேலை பார்க்கிறார். பிழைக்க தெரிந்தவர் வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
27-அக்-202021:53:31 IST Report Abuse
kulandhai Kannan குஷ்பு, திமுக வகையறாக்களுக்கு நன்றாக வயிற்றெரிச்சல் கொடுக்கிறார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X