பொது செய்தி

இந்தியா

காஷ்மீர், லடாக்கில் இந்தியர்கள் நிலம் வாங்கலாம்

Updated : அக் 27, 2020 | Added : அக் 27, 2020 | கருத்துகள் (23)
Share
Advertisement
புதுடில்லி: ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில், இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் இனி நிலம் வாங்கலாம். இதற்கான சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.கடந்த ஆண்டு ஆக., மாதம் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப்பிரிவை மத்திய அரசு நீக்கியதுடன் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேசங்களாக
காஷ்மீர், லடாக், இந்தியர்கள், நிலம்

புதுடில்லி: ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில், இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் இனி நிலம் வாங்கலாம். இதற்கான சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

கடந்த ஆண்டு ஆக., மாதம் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப்பிரிவை மத்திய அரசு நீக்கியதுடன் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.
இந்நிலையில், காஷ்மீர் குறித்து மத்திய அரசு, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மூன்றாம் சட்டம் 2020 என்ற மற்றுமொரு புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது. இதில், காஷ்மீர் மாநிலத்தில் இருந்த 12 மாநில சட்டங்கள் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளன. 26 சட்டங்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. காஷ்மீர் வளர்ச்சி சட்டத்தின் 17-வது பிரிவில் ஜம்மு காஷ்மீரின் நிரந்தர குடிமக்கள் என்ற வார்த்தையை மத்திய அரசு நீக்கியுள்ளது.


latest tamil newsமத்திய அரசின் புதிய சட்டப்படி, இந்தியர்கள் யாரேனும், காஷ்மீர் மற்றும் லடாக்கில் இனி நிலம் வாங்க முடியும். அதேநேரத்தில் விவசாய நிலத்தை வாங்க முடியாது. விவசாய நிலத்தை மற்றொரு விவசாயிக்கு மட்டுமே விற்கவோ மாற்றம் செய்யவோ முடியும். விவசாயி அல்லாதவருக்கு, அரசின் அனுமதிக்கு பிறகே விற்க முடியும். இவ்வாறு அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த சட்டம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
29-அக்-202009:39:38 IST Report Abuse
sankaseshan Good move by government of India . Safety of new settlers should be ensured , kashmiri pandits sould be given priority along with army personnel . Jaihind .
Rate this:
Cancel
SUNDAR - chennai,இந்தியா
28-அக்-202009:19:08 IST Report Abuse
SUNDAR ராணுவத்தில் உயிர் இறந்தவர்களின் குடும்பத்திற்கு முதலில் இலவசமாக நிலம் வழங்க வேண்டும்.
Rate this:
Cancel
Lingam - Coiambature,இந்தியா
28-அக்-202005:29:43 IST Report Abuse
Lingam அடாடா....திமுகக்காரனுங்க இனி காஷ்மீரை வளைச்சுப் போட்டுறுவானுங்களே
Rate this:
SUNDAR - chennai,இந்தியா
28-அக்-202009:29:53 IST Report Abuse
SUNDARஆனால் அங்கே கட்ட பஞ்சாயத் பண்ண முடியாது. அங்கே திராவிட களவாணி கட்சி கிடையாது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X