சென்னை: தமிழகத்தில் இன்று (அக்.,27) அதிகபட்சமாக சென்னையில் 1,451 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் அங்கு இதுவரை 1.85 லட்சம் பேர் வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 695 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன்மூலம் அங்கு இதுவரை 1,97,077 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, கோவையில் 209 பேருக்கும், சேலத்தில் 146 பேருக்கும், செங்கல்பட்டில் 144 பேருக்கும், திருவள்ளூரில் 115 பேருக்கும், திருப்பூரில் 99 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 98 பேருக்கும், நீலகிரியில் 81 பேருக்கும், ஈரோடில் 76 பேருக்கும், நாமக்கல், வேலூரில் தலா 68 பேருக்கும், தஞ்சாவூரில் 61 பேருக்கும், மதுரையில் 57 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

உயிரிழப்பு
இன்று சென்னையில் 7 பேரும், திருப்பூரில் 5 பேரும், சேலத்தில் 3 பேரும், செங்கல்பட்டு, கோவை, மதுரையில் தலா 2 பேரும், கடலூர், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், சிவகங்கையில் தலா ஒருவரும் என 27 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
டிஸ்சார்ஜ்
இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,451 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதன்மூலம் அங்கு வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 1,85,374 ஆக அதிகரித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று கோவையில் 373 பேரும், சேலத்தில் 191 பேரும், செங்கல்பட்டில் 184 பேரும், திருவள்ளூரில் 163 பேரும், காஞ்சிபுரத்தில் 113 பேரும், கிருஷ்ணகிரியில் 109 பேரும், ஈரோடில் 108 பேரும், தஞ்சாவூர், விழுப்புரத்தில் தலா 101 பேரும், திருப்பூரில் 92 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
மாவட்ட வாரியாக இன்றைய நிலவரம்


தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE