புதுடில்லி: ஊழல் என்பது நாட்டிற்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. இது அரசியல் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக மாறி விட்டது என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

அக்.,27 ம் தேதி முதல் நவ.,2 வரையிலான ஒரு வாரகாலம் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது.இது குறித்து கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. கருத்தரங்கில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது: ஊழலை எதிர்த்து போராடுவது என்பது ஒரு தனி நபரின் , நிறுவனத்தின் வேலை அல்ல அதே நேரத்தில் அது ஒரு கூட்டு பொறுப்பு.

தற்போதுள்ள சூழ்நிலையில் பயனுள்ள தணிக்கை மற்றும் திறன்மேம்பாடு மற்றும் ஊழலுக்கு எதிரான பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் தேவை.கடந்த பத்தாண்டுகளில் ஊழல் படிப்படியாக வளர்ந்து வந்துள்ளது. அது நாட்டில் ஒரு வலிமையான வடிவத்தை கொண்டுள்ளது. ஊழல் ஒரு தலைமுறையினரால் அடுத்தடுத்து முன்னெடுக்கப்படுகிறது.
ஊழல் "என்பது நாட்டுக்கு ஒரு பெரிய சவாலாகும், மேலும் இது பல மாநிலங்களில் அரசியல் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டது.
நமது நிர்வாக நடைமுறை வெளிப்படையாகவும் மக்களுக்குப் பதிலளிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.ஊழல் என்பது வளர்ச்சிக்கு தடையாக இருப்பது மட்டுமின்றி சமூக சமநிலையையும் வெகுவாக பாதிக்கிறது.ஊழலுக்கு எதிராக எந்தவிதமான சமரசமும் இன்றி இந்த அரசு முன்னேறிக் கொண்டிருக்கிறது.ஊழல் அந்நிய செலாவணி முறைகேடு பொருளாதார குற்றங்கள்...போதைப்பொருள் கடத்தல் அமைப்பு இவை எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது .இவ்வாறு மோடி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE