ஏழைகளுக்கு வங்கிக் கடன் சாத்தியமாகியுள்ளது

Updated : அக் 28, 2020 | Added : அக் 27, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
லக்னோ : 'தெருவோர வியாபாரிகளுக்கு, வங்கிக் கடன் என்பது, கடந்த காலங்களில் எட்டாக் கனியாக வே இருந்தது. தற்போது, அவர்களது நேர்மையையும், கடின உழைப்பையும் அங்கீகரிக்கும் விதமாக, கடன் உதவி திட்டத்தை, மத்திய அரசு வழங்கியுள்ளது' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தெருவோர வியாபாரிகளுக்கு வங்கிக் கடன் அளிக்கும், பிரதமர் சுயநிதி திட்டத்தை,
ஏழைகள், வங்கிக்கடன், சாத்தியம், பிரதமர்மோடி

லக்னோ : 'தெருவோர வியாபாரிகளுக்கு, வங்கிக் கடன் என்பது, கடந்த காலங்களில் எட்டாக் கனியாக வே இருந்தது. தற்போது, அவர்களது நேர்மையையும், கடின உழைப்பையும் அங்கீகரிக்கும் விதமாக, கடன் உதவி திட்டத்தை, மத்திய அரசு வழங்கியுள்ளது' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தெருவோர வியாபாரிகளுக்கு வங்கிக் கடன் அளிக்கும், பிரதமர் சுயநிதி திட்டத்தை, கடந்த ஜூன், 1ல், பிரதமர் துவங்கி வைத்தார்.இத்திட்டத்தில் பயன்பெற, 25 லட்சம் தெருவோர வியாபாரிகள் மனு அளித்தனர். அதில், 12 லட்சம் பேருக்கு, வங்கி கடன் உதவி வழங்கப்பட்டது.உத்தர பிரதேசத்தில் மட்டும், 3.75 லட்சம் வியாபாரிகளுக்கு கடன் தொகை வழங்கப்பட்டு உள்ளது.
இதில் பயன் அடைந்த, உ.பி., வியாபாரிகளுடன், பிரதமர் நரேந்திர மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நேற்று உரையாடினார்.அப்போது அவர் பேசிய தாவது:அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்ற, 'ஜன்தன்' திட்டம் துவங்கப்பட்ட போது, பலர் கேள்வி எழுப்பினர். கேலியாக சிரித்தனர். அந்த வங்கி கணக்கு தான், நாட்டின் ஏழை எளிய மக்களுக்கு தற்போது பேருதவியாக உள்ளது.பிரதமர் சுயநிதி திட்டத்தின் வாயிலாக, அந்த வங்கி கணக்கில் தான், கடன் தொகை, தெருவோர வியாபாரிகளை சென்றடைகிறது. அவர்கள்தங்கள் கடின உழைப்பால், கடன் தொகையை சரியான நேரத்தில் திருப்பி செலுத்தி வருகின்றனர்.


ஏழை மக்கள், தங்கள் நேர்மை மற்றும் சுயமரியாதையில் என்றுமே சமரசம் செய்ததில்லை என்பதற்கு, இதுவே சான்று.ஏழை எளிய மக்களுக்கு கடன் வழங்கினால், அதை திரும்பப் பெற முடியாது என்ற பிம்பத்தை, கடந்த காலங்களில், அவர்களை வைத்து அரசியல் செய்தவர்கள் உருவாக்கி வைத்திருந்தனர். அவர்கள் செய்யும் ஊழல்களை மறைப்பதற்காக, அந்த பழியை ஏழை மக்கள் மீது சுமத்தினர். இவ்வாறு, அவர் கூறினார்.


வம்சாவளி ஊழல்டில்லியில், ஊழல் எதிர்ப்பு மற்றும் கண்காணிப்பு மாநாட்டை, பிரதமர் மோடி நேற்று துவக்கி வைத்து பேசுகையில், ''ஒரு தலைமுறை விட்டுச் சென்ற ஊழல்களை, அடுத்த தலைமுறை தொடரும், வம்சாவளி ஊழல்கள், இன்று பல மாநிலங்களிலும், மிகப் பெரிய சவாலாக உள்ளது. ஒரு கரையாணைப் போல நாட்டை அரிக்கிறது. ஊழலை எதிர்த்து போரிடுவது, ஒரு துறையின் பணி மட்டுமல்ல, அதை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒழிக்க வேண்டும்'' என்றார்.


'சிறப்பு உதவித் திட்டம் வேண்டும்'தெருவோர வியாபாரிகளுக்கான வங்கிக் கடன் உதவி திட்டம் குறித்து, காங்கிரஸ் பொதுச் செயலர், பிரியங்கா நேற்று கூறியதாவது:கொரோனா ஊரடங்கால், தெருவோர வியாபாரிகளின் பொருளாதார நிலை கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. தினசரி வாழ்க்கையை நடத்தவே அவர்கள் சிரமப்படுகின்றனர். இந்த நேரத்தில் அவர்களுக்கு சிறப்பு நிதி உதவி திட்டங்கள் தான் தேவையே தவிர, வங்கிக் கடன் அல்ல.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pattikkaattaan - Muscat,ஓமன்
28-அக்-202010:02:14 IST Report Abuse
pattikkaattaan உயர்திரு மோடி ஐயாவுக்கு வணக்கம் .. நீங்கள் ஏழை மக்களுக்கு நல்ல திட்டங்களை அறிவிக்கிறீர்கள் ... ஆனால் அவற்றை அதிகாரிகளும் அரசியல்வியாதிகளும் தின்று கொழுத்துக்கொண்டுள்ளார்கள்.. ஏழை மக்கள் இன்னும் தெருவில் நிற்கிறார்கள் .. நீங்கள் ஆட்சிக்கு வந்து அக்கிரமம் செய்பவர்களை பிடித்து தண்டிப்பீர்கள் என்று நினைத்த சாதாரண மனிதர்களில் நானும் ஒருவன் .. நமக்கு ஒரு யுகபுருஷன் கிடைத்துவிட்டார் என்று நினைத்தோம் .. ஆனால் இன்னும் நாட்டில் ஊழல் சிறிதும் ஒழியவில்லை .. கொள்ளையோ கொள்ளை .. ஏன் அதை தடுத்து நிறுத்தமாட்டேன் என்கிறீகள் .. ஊழல் செய்பவர்களை பிடித்து ஆயுள் தண்டனையோ அல்லது தூக்கிலோ போடாவிட்டால் இந்த நாடு என்றைக்கும் நல்ல நாடாக மாறப்போவதில்லை .. கண் முன்னே பார்க்கிறோம் .. அரசியல்வாதிகளின் சொத்துக்கள் மலைபோல் உயர்ந்துகொண்டே போகிறது .. பல்லாயிரம் கோடிகள் வெளிநாட்டில் முதலீடு செய்யப்படுகிறது .. எப்படி இந்த பணம் வெளியே செல்கிறது .. எங்களை போன்ற லட்சக்கணக்கான தொழிலாளிகள் வெளிநாட்டில் உழைத்து சம்பாதித்த பணத்தை, மிச்சம் பிடித்து இந்தியாவிற்கு அனுப்பி நம் பொருளாதாரம் உயர துணை நிற்கிறோம் .. அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்க்கிறார்கள் .. ஏன் அவர்களை யாரும் கேட்பதில்லை .. அவர்களுக்குத்தான் எல்லா மரியாதையும் .. ஏழை என்று முன்னேறுவது ?.. கூழோ கஞ்சியோ குடித்தாலும் நேர்மையாக இருக்கவேண்டும் , நேர்மையாக சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பது தவறா ?..எங்களைப்போன்ற மக்களின் எண்ணங்களுக்கு எப்போது பதில் கிடைக்கும் ?..
Rate this:
Shankar - CHENNAI,ஓமன்
28-அக்-202016:25:15 IST Report Abuse
Shankar@பட்டிக்காட்டான், உங்களுடைய கருத்து விரைவில் மாயமாகும்...
Rate this:
Cancel
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
28-அக்-202008:42:42 IST Report Abuse
NicoleThomson கடன் கொடுப்பதும் அதனை தள்ளுபடி செய்வதும் வேண்டவே வேண்டாம் , ஒழுக்கம் பற்றி எப்போது மக்கள் உணர்வார்கள்?
Rate this:
Gurumoorthi - Erode,இந்தியா
28-அக்-202014:08:46 IST Report Abuse
Gurumoorthi இலவசம் கொடுப்பதற்கு பதில் கடன் கொடுக்கலாம் தவறில்லை. கந்து வட்டி காரர்கள் அதிகம் சுரண்டுவது இது போன்ற ரோட்டோர வியாபாரிகளிடம் தான்....
Rate this:
Cancel
Dharmaraj b - chennai,இந்தியா
28-அக்-202007:56:44 IST Report Abuse
Dharmaraj b பிரியங்கா ஜீ சொல்வது போல் சிறப்பு நிதி தந்தால் ஓரீரு நாளில் செலவு தான் ஆகும்.. நிரந்தர தொழில் முதலீடாகாது.. கடன் தான் உழைக்க வைக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X