லாலுவை விமர்சித்த நிதிஷ் - பிரதமரை உதாரணம் காட்டிய தேஜஸ்வி

Updated : அக் 27, 2020 | Added : அக் 27, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
பாட்னா: மகன் வேண்டும் என்பதற்காக சிலர் 8 குழந்தைகள் பெற்றுள்ளனர் என லாலுவை பெயர் குறிப்பிடாமல் நிதிஷ் விமர்சித்ததற்கு, “பிரதமருடன் பிறந்தவர்கள் 6 பேர்” என தேஜஸ்வி கூறினார். பீகார் சட்டமன்ற முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (அக்., 28) நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரங்கள் ஓய்ந்துள்ளன. திங்களன்று ஒரு கூட்டத்தில் லாலுவை பெயர் குறிப்பிடாமல் நிதிஷ்

பாட்னா: மகன் வேண்டும் என்பதற்காக சிலர் 8 குழந்தைகள் பெற்றுள்ளனர் என லாலுவை பெயர் குறிப்பிடாமல் நிதிஷ் விமர்சித்ததற்கு, “பிரதமருடன் பிறந்தவர்கள் 6 பேர்” என தேஜஸ்வி கூறினார்.latest tamil news


பீகார் சட்டமன்ற முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (அக்., 28) நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரங்கள் ஓய்ந்துள்ளன. திங்களன்று ஒரு கூட்டத்தில் லாலுவை பெயர் குறிப்பிடாமல் நிதிஷ் கடுமையாக விமர்சித்தார். லாலு - ராப்ரி தேவிக்கு 9 பிள்ளைகள் உள்ளனர். அவர்களில் எட்டாவதாக பிறந்தவர் தேஜஸ்வி.

அது பற்றி கூறுகையில் “சிலர் மகன் வேண்டும் என்பதற்காக எட்டு ஒன்பது பிள்ளைகள் பெற்றுள்ளனர். அவர்களுக்கு மகள்கள் மீது நம்பிக்கை கிடையாது. இது போன்று பீகாரை மாற்ற தான் அவர்கள் விரும்புகிறார்கள்.” என சாடினார். சாதாரணமாக அமைதியுடன் காணப்படும் நிதிஷ் தற்போது கடுமையான விமர்சனங்களை முன் வைக்கிறார்.latest tamil news


தேஜஸ்வி தனது பிரசாரங்களில் “நிதிஷ் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சோர்ந்து போய்விட்டார். எனக்கு 31 வயது தான் ஆகிறது.” என பேசி வருகிறார். இந்த நிலையில் மகனுக்காக பல குழந்தைகள் பெற்றவர் என்ற விமர்சனத்திற்கு டுவிட்டரில் பதில் தந்துள்ள தேஜஸ்வி, “எனது குடும்பத்தைப் பற்றி கருத்து தெரிவிப்பதன் மூலம், நிஷிஷ்குமார் பிரதமர் மோடியை குறிவைக்கிறார். அவருக்கும் 6 உடன்பிறந்தோர் உள்ளனர். நிதிஷ் மோசமாக பேசி, பெண்களையும் என் அம்மாவின் உணர்வுகளையும் அவமதித்துள்ளார். பணவீக்கம், ஊழல், வேலையின்மை போன்ற முக்கிய விஷயங்களை அவர்கள் பேசுவதில்லை.” என கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tc Raman - Kanchipuram,இந்தியா
28-அக்-202019:36:33 IST Report Abuse
Tc Raman அப்பனை போல பிள்ளையும் அரை வேக்காட்டுதனமாக தான் பேசுவான் போலும்
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
28-அக்-202011:14:51 IST Report Abuse
Malick Raja மூடியுள்ள மகராசி அல்லி முடிக்கிறாள் என்றால் .. அது இல்லாமல் இருந்தால் அதற்க்கு யார் பொறுப்பு. அவரவர் தங்களிடம் இருப்பதை தக்கவைக்கிறார்கள். அது ...இல்லாமல் இருந்தால் ..அல்லது வேலை செய்யவில்லையானால் அதற்க்கு யாரையா பொறுப்பு .. மோடிஜிக்கு விவரம் நன்றாக தெரியும் ..
Rate this:
Cancel
28-அக்-202009:24:03 IST Report Abuse
ஆரூர் ரங் அநியாயமாக பிரதமரின் தாயை விமர்சித்திருக்கிறான். அவங்க பிள்ளை பெற்றபோது குக திட்டமே கிடையாது. ஆனால் லாலு 9 பெற்றது குக திட்டம் முழுமையாக அமலில் இருக்கும்போது. அதிலும் 3 பதவியில் இருக்கும்போது😢. இரண்டையும் ஒப்பிடலாமா ?
Rate this:
skandh - Chennai,இந்தியா
28-அக்-202010:46:49 IST Report Abuse
skandhபிரதமரின் உடன்பிறந்தோர் கிரீடத்தை மணிகள். லல்லு வும், அவர் பெற்றதும் தததிகள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X