பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : அக் 27, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
அக்., 28, 1867ஐரோப்பிய நாடான அயர்லாந்தின் டங்கானன் என்ற ஊரில், 1867- அக்., 28-ம் தேதி பிறந்தவர், மார்கரெட் எலிசபெத் நோபிள். இளம் வயதிலேயே, அவரது குடும்பம், இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்தது. கிறிஸ்துவத்தின் மீது பற்றுக் கொண்டிருந்தார். 1895-ல், இங்கிலாந்து சென்றிருந்த சுவாமி விவேகானந்தரைச் சந்தித்து, ஹிந்து மற்றும் இந்தியாவின் பெருமையை அறிந்தார். 1898-ல், நம் நாட்டிற்கு வந்தார்.

இதே நாளில் அன்று


அக்., 28, 1867



ஐரோப்பிய நாடான அயர்லாந்தின் டங்கானன் என்ற ஊரில், 1867- அக்., 28-ம் தேதி பிறந்தவர், மார்கரெட் எலிசபெத் நோபிள். இளம் வயதிலேயே, அவரது குடும்பம், இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்தது. கிறிஸ்துவத்தின் மீது பற்றுக் கொண்டிருந்தார். 1895-ல், இங்கிலாந்து சென்றிருந்த சுவாமி விவேகானந்தரைச் சந்தித்து, ஹிந்து மற்றும் இந்தியாவின் பெருமையை அறிந்தார். 1898-ல், நம் நாட்டிற்கு வந்தார். விவேகானந்தர், அவருக்கு தீட்சை அளித்து, 'அர்ப்பணிப்பு' என்ற பொருளுடைய, 'நிவேதிதா' என்ற பெயரைச் சூட்டினார். மக்கள் சேவையில் ஈடுபட்ட நிவேதிதா, கோல்கட்டாவில், பெண்களுக்கான பள்ளி மற்றும் கைவினை தொழிற் பயிற்சிக் கூடத்தை துவக்கினார். பிளேக் நோயால் பாதிக்கப்பட்டோருக்கு, மருத்துவ உதவி செய்தார். அமெரிக்காவின், நியூயார்க் நகரத்தில், 'ராமகிருஷ்ணா தொண்டர் சங்கம்' என்ற அமைப்பை நிறுவினார். சுதந்திர போராட்டத்திற்காக, இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தார். 1911 அக்., 13ம் தேதி, தன், 44வது வயதில் காலமானார்.சகோதரி நிவேதிதா பிறந்த தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
28-அக்-202011:39:36 IST Report Abuse
Bhaskaran பாரதியார் இவரை சந்தித்தபோது உங்கள் மனைவியை அழைத்து வரவில்லையா என்று கேட்டார் .அதற்குபாரதி இந்தியாவில் அந்த வழக்கம் இல்லை Enru சொன்ன பொது .மகளிர் சுதந்திரம் தராத நீங்கள் தேச சுதந்திரத்தை பற்றி பேசுவது தவறு என்று பெண் உரிமை பற்றி அந்தக்காலத்திலேயே பேசியவர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X