பொது செய்தி

இந்தியா

சீனா-இந்தியா இடையே பிளவு ஏற்படுத்த முயலும் அமெரிக்கா: சீனா விமர்சனம்

Updated : அக் 27, 2020 | Added : அக் 27, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
அமெரிக்க மாகாண செயலாளர் மைக் பாம்பியோ இந்தியாவுடனான டூ ப்ளஸ் டூ கூட்டத்தில் கலந்துகொள்ள அரசு முறை பயணமாக டில்லி வந்துள்ளார். 2018 மற்றும் 19 ஆம் ஆண்டுகளில் டூ பிளஸ் டூ ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரண்டு கூட்டங்கள் நடைபெற்றன. இதனைத்தொடர்ந்து 2020ஆம் ஆண்டு மூன்றாம் கூட்டத்தில் கலந்து கொள்ள இந்தியா வந்துள்ளார். இந்திய அமெரிக்க ராணுவங்களின் கூட்டுப்பயிற்சி,

அமெரிக்க மாகாண செயலாளர் மைக் பாம்பியோ இந்தியாவுடனான டூ ப்ளஸ் டூ கூட்டத்தில் கலந்துகொள்ள அரசு முறை பயணமாக டில்லி வந்துள்ளார். 2018 மற்றும் 19 ஆம் ஆண்டுகளில் டூ பிளஸ் டூ ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரண்டு கூட்டங்கள் நடைபெற்றன. இதனைத்தொடர்ந்து 2020ஆம் ஆண்டு மூன்றாம் கூட்டத்தில் கலந்து கொள்ள இந்தியா வந்துள்ளார்.latest tamil news
இந்திய அமெரிக்க ராணுவங்களின் கூட்டுப்பயிற்சி, இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. லடாக் எல்லைப் பிரச்னை முடியாத நிலையில் சீனா அவ்வப்போது இந்திய எல்லையில் ஊடுருவி வருகிறது.
சீனாவை சமாளிக்க தற்போது இந்திய அரசு அமெரிக்காவுடன் இந்த கூட்டத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மைக் பாம்பியோவுடன் பேசி பல முக்கிய விஷயங்கள் குறித்து முடிவெடுத்துள்ளார்.
இந்தியா-சீனா இடையே பிளவை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சிக்கிறது என்று சீன அரசு தற்போது விமர்சனம் செய்துள்ளது. ஆசியாவில் உள்ளிட்ட பல நாடுகளுடன் தற்போது சீனா மோதல்போக்கில் ஈடுபட்டு வருகிறது. உலக அளவில் அதிக நாடுகளின் எதிர்ப்பை சம்பாதிக்கும் நாடாக சீனா தற்போது மாறி வருவது குறிப்பிடத்தக்கது. மைக் பாம்பியோ கூட்டத்தில் பேசிய பின்னர் ஜப்பான் தென்கொரியா ஆஸ்திரேலியா இலங்கை உள்ளிட்ட பல நாடுகளுக்கு சென்று சீனாவுக்கு எதிராக ஒரு அணியை திரட்ட முற்பட்டு வருகிறார்.


latest tamil newsஆசிய கண்டத்தில் சீனாவை எதிர்த்து அமெரிக்கா வியூகம் வகுத்துவருவது சீனாவுக்கு உள்ளூர பீதியை ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுக்க இயலாது.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-அக்-202014:37:21 IST Report Abuse
Indian Kumar ( Nallavarkal  Aatchikku VARAVENDUM ) இந்தியா பாதுகாப்பாக இருக்க அமெரிக்காவின் உதவி தேவை, சீனா செய்த பாவத்துக்கு தண்டனை அனுபவித்தே தீரும் 20 ஆன்மாக்களின் சாவுக்கு பதில் சொல்லி ஆகவேண்டும்.
Rate this:
Cancel
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
28-அக்-202013:20:26 IST Report Abuse
Dr. Suriya நீங்கதான் இந்திய- அமெரிக்காவின் இடையே பிளவு ஏற்படுத்துத்த பார்கிறீர்கள்.... உங்கள் கூற்று படி சரி என்ரே வைத்துக்கொண்வோம் நீங்கள் அந்த பிளவை சரி செய்ய நீங்கள் ஆக்ரிமித்து வைத்துள்ள இந்திய இடங்களை திருப்பி தந்து நட்பை பலப்படுத்தலாமே ... நீங்கள் எல்லாம் நயவஞர்கள் என்று இந்திய மக்களுக்கு இந்த ஆட்சியில் தான் தெரிய வந்தது....
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
28-அக்-202011:26:18 IST Report Abuse
Malick Raja இந்திய நாட்டின் பாதுகாப்பு மிகவும் வலிமை வாய்ந்தது . ஆனால் அதை மறைத்து வைத்திருப்பது அரசியல் .. என்று நாம் அணு ஆயுதம் சொந்தமாக தயாரித்து விட்டோமோ .. அன்றோடு பாதுகாப்பு செலவினங்கள் குறைக்கப்பட்டிருக்க வேண்டும் .. ஒரே ஒரு அறிவிப்பு விட்டிருக்க வேண்டும் .. அண்டை நாடுகள் இந்தியாவில் படை எடுத்தால் நாங்கள் போரிடவே மாட்டோம் .. அணுஆயுதம் மட்டுமே போரிடும் ..இழப்புகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று ஒரு போடு போட்டால் போதும் .. ஒரு பய புள்ள வரமாட்டான் .. அமெரிக்க தனது பொருளாதாரத்தை உயர்த்த ..தக்கவைக்க எதுவும் செய்யும் . அந்தவகையில் சீனாவை வைத்து இந்தியாயவை மிரட்டி இந்தியாவுக்கு அமரிக்க ராணுவத்தளவாடங்களை விற்று தங்கள் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் நயவஞ்சக செயல் கொண்ட நாடு அமெரிக்கா .. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கொள்கை கோட்பாடுகள் மாறாமல் தங்களை நாட்டின் நலனை மட்டுமே கருதும் நாடு அமெரிக்கா .. யாரை எப்படி குதர்க்க வேலைகள் செய்து ஆட்டையை போடுவதில் அறிவார்ந்த நிலையில் அமெரிக்க நாடு இருக்கிறது ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X