அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக கவர்னருக்கு உத்தரவிடுங்கள்: அமித் ஷாவிடம் குவியும் கடிதங்கள்

Updated : அக் 28, 2020 | Added : அக் 27, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
மருத்துவக் கல்வி சேர்க்கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் தர உத்தரவிடும்படி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, தமிழக, எம்.பி.,க்கள் சிலர், தனித்தனியே கடிதம் அனுப்பியுள்ளனர்.மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, தி.மு.க., உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த கட்சிகளின், எம்.பி.,க்கள் அனுப்பியுள்ள கடிதங்களில்
தமிழக கவர்னர்,அமித் ஷா, கடிதங்கள், திமுக, மருத்துவ கவுன்சிலிங், உள்ஒதுக்கீடு

மருத்துவக் கல்வி சேர்க்கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் தர உத்தரவிடும்படி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, தமிழக, எம்.பி.,க்கள் சிலர், தனித்தனியே கடிதம் அனுப்பியுள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, தி.மு.க., உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த கட்சிகளின், எம்.பி.,க்கள் அனுப்பியுள்ள கடிதங்களில் கூறப்பட்டுள்ளதாவது:மருத்துவக் கல்வி மாணவர்கள் சேர்க்கையில், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இடையிலான ஏற்றதாழ்வில், சமநிலை ஏற்படுத்தியாக வேண்டும். இதற்காக, 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டை, அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் மசோதா, தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஒப்புதல் கேட்டு, தமிழக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், கவர்னர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.

தற்போது, மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் தேதிகளும் அறிவிக்கப்பட்டு, பணிகள் துவங்கியுள்ளன. இனியும் தாமதம் செய்தால், அரசு பள்ளி மாணவர்களின் எதிர்காலம், பாழாகிவிடும்.எனவே, அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் மசோதாவுக்கு, உடனடியாக ஒப்புதல் தரும்படி தமிழக கவர்னருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

- நமது டில்லி நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
28-அக்-202020:48:24 IST Report Abuse
sankaseshan Gavarnar is appointed by President of India . No-one can force him , the intellegent opposition leaders are not aware of this simple truth . The only thing they know is how to swindle public money and fool the people .
Rate this:
Cancel
rao -  ( Posted via: Dinamalar Android App )
28-அக்-202019:18:48 IST Report Abuse
rao Governor should be left to himself to decide the law on merits and none should force the governor.
Rate this:
Cancel
mjayaps - Coimbatore,இந்தியா
28-அக்-202017:29:37 IST Report Abuse
mjayaps நீட் உருவாக்கப்பட்டது திறமையான மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்க, ஆனால் ஓசி, பிசி, பிசிஎம், எம்பிசி, எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி என நீண்ட லிஸ்ட். இதில் அரசு மாணவர்களுக்கு வேறு தனியாக ஒதுக்கீடு. அவ்ளோ சீட்ஸ் எம்பிபிஎஸ்-ல இல்ல இங்க. ஒரு மீல்ஸ் வாங்கி பிச்சு தின்ன கதை தான். மீண்டும் ஒரு முறை, நீட் உருவாக்கப்பட்டது திறமையான மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்க மட்டுமே..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X