மீண்டும் வீழ்ந்தது டில்லி அணி: பேட்டிங், பவுலிங் ஏமாற்றம்

Updated : அக் 27, 2020 | Added : அக் 27, 2020
Share
Advertisement
துபாய்: ஐ.பி.எல்., லீக் போட்டியில், பவுலிங், பேட்டிங்கில் ஏமாற்றிய டில்லி அணி, ஐதராபாத்திடம் 88 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.ஐக்கிய அரபு எமிரேட்சில் ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் நடக்கிறது. துபாயில் நடந்த லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயரின் டில்லி, வார்னரின் ஐதராபாத் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற டில்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் பவுலிங் தேர்வு செய்தார்.சகா

துபாய்: ஐ.பி.எல்., லீக் போட்டியில், பவுலிங், பேட்டிங்கில் ஏமாற்றிய டில்லி அணி, ஐதராபாத்திடம் 88 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.



latest tamil news



ஐக்கிய அரபு எமிரேட்சில் ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் நடக்கிறது. துபாயில் நடந்த லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயரின் டில்லி, வார்னரின் ஐதராபாத் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற டில்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் பவுலிங் தேர்வு செய்தார்.


சகா அபாரம்



ஐதராபாத் அணிக்கு கேப்டன் வார்னர், சகா ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. ஐ.பி.எல்., அரங்கில் வார்னர் (66) 47வது அரைசதம் அடித்தார். வேகமாக ரன்கள் சேர்த்த சகா, 27 வது பந்தில் அரைசதம் அடித்தார். இவர் 45 பந்தில் 87 ரன்கள் எடுத்தார்.

ஐதராபாத் அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 219 ரன்கள் குவித்தது. மணிஷ் பாண்டே (44), வில்லியம்சன் (11) அவுட்டாகாமல் இருந்தனர். 25 போட்டிகளுக்குப் பின் முதன் முறையாக டில்லி அணியின் ரபாடா, ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை.


பன்ட் ஆறுதல்



இமாலய இலக்கைத் துரத்திய டில்லி அணிக்கு ஷிகர் தவான் (0), ஸ்டாய்னிஸ் (5) துவக்கத்திலேயே அதிர்ச்சி கொடுத்தனர். ரஷித் கானின் முதல் ஓவரில் ஹெட்மயர் (16), ரகானே (26) அவுட்டாகினர். கேப்டன் ஸ்ரேயாஸ் (7), அக்சர் படேலும் (1) நிலைக்கவில்லை.ரிஷாப் பன்டும் (36) அவுட்டாக, டில்லி தோல்வி உறுதியானது.


latest tamil news



டில்லி அணி 19 ஓவரில் 131 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, தோற்றது. தேஷ்பாண்டே (20) அவுட்டாகாமல் இருந்தார். பஞ்சாப், கோல்கட்டா தற்போது ஐதராபாத் என வரிசையாக மூன்று அணிகளிடம் டில்லி தோல்வியடைந்தது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X