அரசியல் செய்தி

தமிழ்நாடு

'முதல்வர் மன்னிப்பு கேட்பாரா?'

Added : அக் 28, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
சென்னை:'கன்னியாகுமரி மாவட்டத்தில், கொரோனா காலத்தில் மக்களுக்கு பணியாற்றிய, டாக்டர் சிவராமபெருமாள், டி.எஸ்.பி., மிரட்டலால் தற்கொலை செய்தது அதிர்ச்சியளிக்கிறது' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:கன்னியாகுமரி மாவட்ட தி.மு.க., மருத்துவரணி துணை அமைப்பாளர் சிவராமபெருமாள், கொரோனா காலத்தில் மக்களுக்கு மருத்துவப் பணியாற்றிய டாக்டர். அவரை, டி.எஸ்.பி.,
 'முதல்வர் மன்னிப்பு கேட்பாரா?'

சென்னை:'கன்னியாகுமரி மாவட்டத்தில், கொரோனா காலத்தில் மக்களுக்கு பணியாற்றிய, டாக்டர் சிவராமபெருமாள், டி.எஸ்.பி., மிரட்டலால் தற்கொலை செய்தது அதிர்ச்சியளிக்கிறது' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:

கன்னியாகுமரி மாவட்ட தி.மு.க., மருத்துவரணி துணை அமைப்பாளர் சிவராமபெருமாள், கொரோனா காலத்தில் மக்களுக்கு மருத்துவப் பணியாற்றிய டாக்டர். அவரை, டி.எஸ்.பி., பாஸ்கர் விசாரணை என்ற பெயரில் அழைத்து, மிரட்டி உள்ளார்.அவரது கண்ணெதிரில், அவருடைய மனைவியை தரக்குறைவாக, அவதுாறாகப் பேசியதால், மனமுடைந்து, தற்கொலை செய்திருப்பது, மிகுந்த வேதனைஅளிக்கிறது.

சாத்தான்குளம் போலீஸ் நிலைய சுவர்களில் இருந்த ரத்த மாதிரியும், ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆடைகளில் இருந்த ரத்த மாதிரியும் பொருந்தியுள்ளன. இருவர் உடல்களிலும், 18 இடங்களில் காயங்கள் இருந்தன. இருவர் மீதும் பொய் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என, இதயத்தை கலங்கடிக்கும் தகவல்களை, சி.பி.ஐ., கூறியிருக்கிறது.இருவரின் கொலைகளை மறைத்ததற்காகவும், சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் உள்ள, ஒரு சில போலீசாரை காப்பாற்ற, ஒட்டுமொத்த தமிழக போலீஸ் துறையின் நன்மதிப்பையே கெடுத்ததற்காகவும், முதல்வர், மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்பாரா?இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.


ஸ்டாலினின் மற்றொரு அறிக்கை:

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்பில், 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை, ஒரு மாதத்திற்கும் மேலாக, கவர்னர் நிறுத்தி வைத்துள்ளார்.அதற்கு, கவர்னர் உடனே ஒப்புதல் அளிக்க உத்தரவிடுமாறு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, தி.மு.க., - எம்.பி.,க்கள் கடிதம் அனுப்பி உள்ளனர்.

இந்த மசோதாவுக்கு ஒப்புதல் பெறுவதற்கு, பிரதமருக்கோ அல்லது உள்துறை அமைச்சருக்கோ, அரசியல் ரீதியாக எவ்வித அழுத்தமும் கொடுக்க, ஏனோ முதல்வர் அஞ்சுகிறார். கவுன்சிலிங் துவக்கப்பட்டு விட்ட நிலையில், அரசு பள்ளி மாணவர்களின் கதி என்ன? ஏற்கனவே, இரட்டை வேடம் போட்டு, பா.ஜ., வுடன் கூட்டணி வைத்து, 'நீட்' தேர்வை அனுமதித்தது போல, அரசு பள்ளி மாணவர்களுக்கான, இந்த இட ஒதுக்கீடு மசோதாவை யும், முதல்வர் காற்றில் பறக்கவிடப் போகிறாரா; மாணவர்களின் நலனை கை கழுவி, காவு கொடுக்கப் போகிறாரா?இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.S. PERUMAL PILLAI - Nagercoil,இந்தியா
28-அக்-202020:26:02 IST Report Abuse
M.S. PERUMAL PILLAI உங்களுடைய ஆட்சியில் கட்ட பஞ்சாயத் அடிதடி நிலம் அபகரிப்புனு எவ்ளவோ நடந்துச்சு. நீங்க மன்னிப்பு கேட்பீங்களா ரொம்ப நல்லவர் போல எப்படித்தான் பேட்டி குடுக்குறீங்களோ? உலக நடிப்பு டா சாமி. யோக்கியர் வரார் சொம்பை எடுத்து உள்ள வைன்னு ஒரு சொலவடை உண்டு. அது நியாபகம் வந்துச்சு.
Rate this:
Cancel
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
28-அக்-202016:00:07 IST Report Abuse
Dr. Suriya கட்சிக்காரர்கள் குண்டர்களை அனுப்பி மதுரை பத்திரிகை அலுவலகத்தை கொளுத்தி பலபேர் சாவகாரணமாக இருந்தவர்கள்... தொண்டர் சாதிக் தற்கொலைக்கு? காரணமானவ்ர்கள் மன்னிப்பு கேட்டு விட்டார்களா என்ன .....
Rate this:
Cancel
Idithangi - SIngapore,சிங்கப்பூர்
28-அக்-202014:52:01 IST Report Abuse
Idithangi ரெட்டை வேடம் போட்டு அதிமுக நீட் தேர்வை அனுமதித்தங்களா..? திமுக மத்தியில் காங்கிரசுடன் ஆட்சி செய்யம்போது கள்ள மௌனம் காத்து நீட் தேர்வை உருவாக்க அனுமதிச்சவங்க தானே இவங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X