பொது செய்தி

தமிழ்நாடு

இன்று துவங்குகிறது வடகிழக்கு பருவ மழை

Updated : அக் 28, 2020 | Added : அக் 28, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:நான்கு மாதங்களாக பெய்த தென்மேற்கு பருவ மழை, நேற்று முடிவுக்கு வந்தது. இன்று முதல், வடகிழக்கு பருவ மழை காலம் துவங்குகிறது.தென்மேற்கு பருவ மழை, இந்த ஆண்டு ஜூன், 1ல் துவங்கியது. அந்தமான், கேரளா, தமிழகம், கர்நாடகா என, பல மாநிலங்களுக்கும் பரவி, வட மாநிலங்களில் கொட்டியது. மும்பை, ராஜஸ்தான், குஜராத், தெலுங்கானா, வடகிழக்கு மாநிலங்களில் கன மழையாக கொட்டி, வெள்ள பெருக்கையும்
 இன்று துவங்குகிறது  வடகிழக்கு பருவ மழை

சென்னை:நான்கு மாதங்களாக பெய்த தென்மேற்கு பருவ மழை, நேற்று முடிவுக்கு வந்தது. இன்று முதல், வடகிழக்கு பருவ மழை காலம் துவங்குகிறது.

தென்மேற்கு பருவ மழை, இந்த ஆண்டு ஜூன், 1ல் துவங்கியது. அந்தமான், கேரளா, தமிழகம், கர்நாடகா என, பல மாநிலங்களுக்கும் பரவி, வட மாநிலங்களில் கொட்டியது. மும்பை, ராஜஸ்தான், குஜராத், தெலுங்கானா, வடகிழக்கு மாநிலங்களில் கன மழையாக கொட்டி, வெள்ள பெருக்கையும் ஏற்படுத்தியது.

தமிழகத்திலும் பெரும்பாலான நீர்நிலைகளில் நீராதாரத்தை நிரப்பிய பருவ மழை, நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இன்று முதல், வடகிழக்கு பருவ மழை காலம் துவங்குகிறது. இந்த பருவ காலம், தமிழகம், கேரளா மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு முக்கியமானது.


latest tamil news




குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட வடக்கு மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்களுக்கும், தெற்கு ஆந்திர பகுதிகளுக்கும், ஒரு ஆண்டுக்கு தேவையான நீராதாரத்தை, வடகிழக்கு பருவ மழை வழங்கும்.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை, இயல்பை ஒட்டி பெய்யும் என்றும், வட மாவட்டங்களில் இயல்பாகவும், தென் மாவட்டங்களில் இயல்புக்கு குறைவாகவும் பெய்யும் என்றும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் நிலவும் வளி மண்டல சுழற்சி காரணமாக, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், இன்று இடியுடன் கூடிய கன மழை பெய்யும்.
தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில், லேசான மழை பெய்யும். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில், லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பெரிய ராசு - தென்காசி ,இந்தியா
28-அக்-202013:01:37 IST Report Abuse
பெரிய ராசு காலையில் இருந்து வெய்யில் கொளுத்துது ..இதிலே ..கன மழை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X