'ஏசி'க்கு மாற்று
அறைகளில் நிலவும் வெப்பநிலையை குறைக்க உதவும் புதிய வகை 'சூப்பர் ஒயிட்' பெயின்டை, அமெரிக்காவின் புர்டியூ பல்கலை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது கட்டடங்கள் மீது படும் சூரிய ஒளியின் வெளிச்சத்தில் 95.5 சதவீத அளவை குறைக்கிறது. இதனால் பகல், இரவுகளில் கட்டடங்களில் உள்ளே வெப்பம் குறைகிறது. இது எதிர்காலத்தில்
'ஏசி'க்கு மாற்றாக வரும் என தெரிவித்துள்ளனர். தற்போதுள்ள வெப்பத்தை குறைக்கும் பெயின்ட்கள், 80 - 90 சதவீத வெளிச்சத்தை மட்டுமே தடுக்கிறது. இது கட்டடத்தை குளிர்ந்த நிலையில் வைக்க உதவுகிறது.
தகவல் சுரங்கம்
நீளமான கால்வாய்
பஞ்சாபின் ஹர்கி என்ற இடத்தில் தொடங்கி ஹரியானா மற்றும் ராஜஸ்தான் வரை செல்கிறது 'இந்திரா கால்வாய்'. இது 1984க்கு முன் ராஜஸ்தான் கால்வாய் என அழைக்கப்பட்டது. இதன் நீளம் 650 கி.மீ., பஞ்சாபில் 167 கி.மீ., துாரமும், ஹரியானாவில் 37 கி.மீ., துாரமும் பாய்கிறது. கால்வாயின் முக்கிய நோக்கம், ராஜஸ்தானின் விவசாய நிலங்களை வளப்படுத்துவதே என்பதால், இங்கு 445 கி.மீ., துாரம் இந்த கால்வாய் பாய்கிறது. 16 லட்சம் ஏக்கர் நிலம்
பாசன வசதி பெறுகிறது. இந்தியாவின் நீளமான கால்வாய் என அழைக்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE