சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓய்வு நீதிபதி கர்ணன் மீது வழக்குப் பதிவு

Updated : அக் 28, 2020 | Added : அக் 28, 2020 | கருத்துகள் (26)
Share
Advertisement
சென்னை : முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் மீது, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதியாக பணியாற்றி, 2017ல் ஓய்வு பெற்றவர் கர்ணன். இவர், சில தினங்களுக்கு முன் வெளியிட்ட, 'வீடியோ' ஒன்றில், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் குறித்து, அவதுாறு பரப்பும் வகையில் பேசியிருந்தார்.இது, சமூக
நீதிபதி கர்ணன், வழக்கு பதிவு, நீதிமன்ற அவதிப்பு

சென்னை : முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் மீது, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதியாக பணியாற்றி, 2017ல் ஓய்வு பெற்றவர் கர்ணன். இவர், சில தினங்களுக்கு முன் வெளியிட்ட, 'வீடியோ' ஒன்றில், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் குறித்து, அவதுாறு பரப்பும் வகையில் பேசியிருந்தார்.


latest tamil news



இது, சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து, கர்ணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை உயர்நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு கடிதம் எழுதினர். மேலும், சென்னை, போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் அளித்தனர்.

இந்நிலையில், கர்ணன் மீது, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், நேற்று இரு பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர். கர்ணன் ஏற்கனவே, நீதிமன்ற அவதிப்பு தொடர்பாக சிறைசென்றவர்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
28-அக்-202018:42:09 IST Report Abuse
RaajaRaja Cholan இதற்காகத்தான் கல்வி தகுதி அடிப்படையில் பதவி கொடுப்பது நல்லது , சுய சிந்தனை இல்லாத கல்வி அறிவு இல்லாத ஆட்கள் வந்தால் இப்படித்தான்
Rate this:
Cancel
Viswam - Mumbai,இந்தியா
28-அக்-202015:45:31 IST Report Abuse
Viswam உயர் நீதிமன்ற நீதிபதிக்கு ஆறு மாசம் ஜெயில்வாசம் கேவலமா தோணுது போலிருக்கு. அதுதான் மறுபடியும் கொஞ்சம் லாங் டைமுக்கு உள்ளே போக ஆசை படறாரு .
Rate this:
Cancel
Murthy - Bangalore,இந்தியா
28-அக்-202013:48:47 IST Report Abuse
Murthy நூல்போட்டவன் சொன்னால் எதுவும் செய்யமாட்டார்கள்....
Rate this:
Anand - chennai,இந்தியா
28-அக்-202014:31:08 IST Report Abuse
Anandஅப்போ ...சாப்பிடறவன் சொன்னால் கேட்டுக்குவாங்களா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X