பொது செய்தி

தமிழ்நாடு

கலெக்டர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

Updated : அக் 28, 2020 | Added : அக் 28, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை : கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் கூடுதல் தளர்வுகளை அறிவிப்பது குறித்து, மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் பழனிசாமி வீடியோ கான்பரன்சிங் முறையில் ஆலோசனை நடத்தினார்.தமிழகத்தில், மார்ச் முதல் கொரோனா ஊரடங்கு பிறக்கப்பட்டது. பின்னர், படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக, மருத்துவக் குழு மற்றும் மாவட்ட கலெக்டர்களுடன், மாதம்தோறும்,
Chief Minister, Edappadi Palanisamy, covid19, corona virus

சென்னை : கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் கூடுதல் தளர்வுகளை அறிவிப்பது குறித்து, மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் பழனிசாமி வீடியோ கான்பரன்சிங் முறையில் ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில், மார்ச் முதல் கொரோனா ஊரடங்கு பிறக்கப்பட்டது. பின்னர், படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக, மருத்துவக் குழு மற்றும் மாவட்ட கலெக்டர்களுடன், மாதம்தோறும், முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். அதன்படி, நடப்பு மாதத்திற்கான ஆலோசனைக் கூட்டம், இன்று நடந்தது.


latest tamil newsஇதில், மருத்துவ நிபுணர் குழுவினர், பல்வேறு பரிந்துரைகளை வழங்க உள்ளனர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், சிகிச்சைகள் மற்றும் பரிசோதனைகள் குறித்தும், மாவட்ட கலெக்டர்களுடன், காலை 10.30 மணிக்கு துவங்கியது. இந்த ஆய்வுக் கூட்டத்தில், துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமை செயலர் சண்முகம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்

மருத்துவ நிபுணர் குழு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் மதியம் 2.30 மணிக்கும், முதல்வர் பழனிசாமி வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார்.
இக்கூட்டத்திற்கு பின், பண்டிகை காலம் கருதி, சினிமா தியேட்டர்கள் திறப்பு உள்ளிட்ட கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படும் என, தெரிகிறது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rengaraj - Madurai,இந்தியா
28-அக்-202016:36:22 IST Report Abuse
Rengaraj இப்போது மக்கள் வாழ்வாதாரத்துக்கு வேலைக்கோ அல்லது வ்யாபாரத்துக்கோ செல்ல வேண்டியுள்ளது. பண்டிகை. ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என்றெல்லாம் பார்ப்பது நடுத்தர மேல்தட்டு வர்க்கத்தினர் மட்டும்தான். இந்த வர்க்கத்தினரை குறிவைத்து பண்டிகை வியாபாரம் நடக்கும். அதன்மூலம் சமுதாயத்தின் கீழ் நிலையில் உள்ளவர்களுக்கு பொருளாதார சக்கரம் சுழல ஒரு வழி கிடைக்கும். அவர்கள் மனநிலையையும் பார்க்கவேண்டும்.
Rate this:
Cancel
28-அக்-202015:38:30 IST Report Abuse
IndiaTamilan Kumar(Nallathai  Ninaippom  Nallathey Nadakkum ) புற நகர் மின்சார ரயில்களை இயக்க வேண்டும் பேருந்துகளில் கூட்டம் அலை மோதுகிறது மட்டு படுத்த வேண்டும் .
Rate this:
Cancel
ntgk - Chennai,இந்தியா
28-அக்-202014:23:54 IST Report Abuse
ntgk சென்னையையை பற்றி குறை கூறிய மற்ற மாநிலத்தார் பண்டிகை காலம் போது மட்டும் நகை, துணிகள் வாங்க இங்கே வருவது ஏன்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X