தேர்தல் பத்திரத்துக்கு தடை விதிக்கப்படுமா?

Updated : அக் 28, 2020 | Added : அக் 28, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் பத்திரத்துக்கு தடை கோரிய மனு மீது, உடனடியாக விசாரணை நடத்த கோரி, உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. பெரிய நிறுவனங்கள், தொழிலதிபர்களிடம், அரசியல் கட்சிகள் நன்கொடை திரட்டுகின்றன. இதில், ரொக்கப் புழக்கத்தை குறைத்து, வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தும் நோக்கில், மத்திய அரசு, 2018 ஜனவரியில், தேர்தல் பத்திர
electoral_bonds, SC, Supreme Court, தேர்தல் பத்திரம், சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி: அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் பத்திரத்துக்கு தடை கோரிய மனு மீது, உடனடியாக விசாரணை நடத்த கோரி, உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

பெரிய நிறுவனங்கள், தொழிலதிபர்களிடம், அரசியல் கட்சிகள் நன்கொடை திரட்டுகின்றன. இதில், ரொக்கப் புழக்கத்தை குறைத்து, வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தும் நோக்கில், மத்திய அரசு, 2018 ஜனவரியில், தேர்தல் பத்திர வெளியீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. நன்கொடை தருவோர், வங்கியில் தேர்தல் பத்திரங்களை வாங்கி, அரசியல் கட்சிகளுக்கு வழங்கலாம். இத்திட்டத்தில், நன்கொடை அளிப்பவரின் பெயர் வெளியிடப்படுவதில்லை.

அதே சமயம், எந்த கட்சிக்கு எவ்வளவு நன்கொடை வந்தது என்ற விபரத்தை, தெளிவாக பெற முடியும். ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு சார்பில், தேர்தல் பத்திர திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், தேர்தல் பத்திரம் தொடர்பாக, மத்திய அரசும், தலைமை தேர்தல் ஆணையமும் இரு வாரங்களில் பதில் அளிக்கும்படி, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டது.


latest tamil news



அதன்பின், இந்த வழக்கு விசாரணை நடக்கவில்லை.இந்நிலையில், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய மனுவில் கூறியிருப்பதாவது:பீஹார் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்ட பின், தேர்தல் பத்திரங்களை வழங்க வும், பத்திரங்களை பெற்று பணம் வழங்கவும், ஸ்டேட் வங்கிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் பத்திர திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி, நாங்கள் தாக்கல் செய்த மனு மீது, ஜன., 20க்கு பின், விசாரணை நடத்தப்படவில்லை. அதனால், அந்த மனு தொடர்பாக, உடனடியாக விசாரணை நடத்தி, தேர்தல் பத்திர திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Saravanakumar Panneerselvam - Chennai,இந்தியா
28-அக்-202013:30:16 IST Report Abuse
Saravanakumar Panneerselvam அனைத்து பத்திரங்கள் மற்றும் நிதி தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்படவேண்டும். எந்த கட்சிக்கும் அளிக்கக் கூடாது.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
28-அக்-202013:13:03 IST Report Abuse
blocked user பல அமைப்புக்கள் கறுப்புப்பணத்தை வைத்தே தேர்தல் நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதனால்த்தான் இது போல வழக்குப்போட்டு பாராளுமன்றத்தை சிறுமைப்படுத்த முயற்சிக்கிறார்கள்.
Rate this:
Cancel
28-அக்-202012:50:30 IST Report Abuse
ஆரூர் ரங் வழக்கமா 3 மாதங்களுக்கு ஒரு முறை பத்திரம் வெளியிடுவார்கள் . ஆனால் ஏப்ரல் ஜூலையில் கொரோனாவால் வெளியிட முடியவில்லை. அது ஏன் என்று வழக்குப் போட்டு கோர்ட் நேரத்தை வீணடிக்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X