பொது செய்தி

இந்தியா

சத்யசாய் அறக்கட்டளைக்கு ஐ.நா., அங்கீகாரம்

Updated : அக் 28, 2020 | Added : அக் 28, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி: மனிதகுல மேம்பாட்டுக்கு, ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளை செய்து வரும் சமூகப் பணிகளுக்கு, ஐ.நா.,வின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ரத்னாகர் வெளியிட்டுள்ள, 'வீடியோ' செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ள பிரசாந்தி நிலையம், பல்வேறு
Sri Sathya Sai Central Trust, Sathya Sai Trust, UN,United Nations,ஐநா,ஐக்கிய நாடுகள் அவை

புதுடில்லி: மனிதகுல மேம்பாட்டுக்கு, ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளை செய்து வரும் சமூகப் பணிகளுக்கு, ஐ.நா.,வின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ரத்னாகர் வெளியிட்டுள்ள, 'வீடியோ' செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ள பிரசாந்தி நிலையம், பல்வேறு மக்கள் நலப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. 'கேஷ் கவுன்டர்' இல்லாத பிரமாண்ட மருத்துவமனையில், ஏழைகளுக்கு இலவசமாக, தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது.


latest tamil newsஅனைவருக்கும் துாய்மையான குடிநீர் வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நல்ல குணங்கள், கருத்துகளை கற்கும் வகையில், இலவச கல்வி வழங்கப்பட்டு வருகிறது. அறக்கட்டளையின் மனிதநேய செயல்பாடுகள், உலகெங்கும் ஏற்கனவே பிரசித்தி பெற்றன.

இந்நிலையில், என்.ஜி.ஓ., எனப்படும் அரசு சாரா அமைப்புகளின் செயல்பாடுகளை கண்காணிக்கும், ஐ.நா., பொருளாதார மற்றும் சமூக கவுன்சில், ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளைக்கு, சர்வதேச அளவிலான, சிறப்பு ஆலோசனை அங்கீகாரம் அளிக்கும்படி, ஐ.நா., பொருளாதார கவுன்சிலுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதன் மூலம், அறக்கட்டளையின் செயல்பாடுகளை, உலகம் முழுதும் பின்பற்றக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Harihara Bharathi - chennai,இந்தியா
01-நவ-202021:45:33 IST Report Abuse
Harihara Bharathi ஜெய் சாய்ராம் ஜெய் சாய்ராம் ஜெய் சாய்ராம்
Rate this:
Cancel
வெற்றிக்கொடி கட்டு - நாத்திக, தேசவிரோத கட்சிகளை ஆதரிக்காதீர்,இந்தியா
28-அக்-202017:40:18 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு வீரமணி நடத்தும் பெரியார் அறக்கட்டளையை ஏன் அங்கீகரிக்கவில்லை? ஓ, அவர் திராவிடர் அதுதானே காரணம் ?
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
28-அக்-202016:12:21 IST Report Abuse
Endrum Indian இளிச்சவாய இந்து இருக்கும் வரையில் புட்டபர்த்தி முதல் நித்யானந்தா கைலாச வரை எதுவும் சாத்தியம் இவை எல்லாம் வெறும் டப்பா அடிப்பதற்கே மற்றபடி ஒரு நல்ல நடவடிக்கை கூட செய்யாது இந்த மாதிரி சாமியார் என்று சொல்லிக்கொள்ளும் பணக்கார நிறுவனங்கள். நம்பாதே நம்பாதே இவர்களை நம்பாதே
Rate this:
Suppan - Mumbai,இந்தியா
28-அக்-202017:12:25 IST Report Abuse
Suppanநீங்கள் புட்டபர்த்தி சென்று சத்ய சாய் ஆஸ்பத்திரியைப் பார்த்து வாருங்கள். பிறகு விமரிசியுங்கள். வாய் புளித்ததையோ மாங்காய் புளித்ததோ என்று எழுதுவது தவறு...
Rate this:
G Kannan - Chennai,இந்தியா
28-அக்-202017:54:18 IST Report Abuse
G Kannanசென்று பார்க்காமல் விமர்சனம் செய்வது மிக தவறு நண்பா (என்றும் இந்தியன் ). பகவான் சத்யா சாய் டிரஸ்ட் ஆற்றும் பணி மகத்தானது .......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X