சென்னை, அடையாறு ஆற்றில், ஆக்கிரமிப்பை அகற்றி, துார் வாரி அகலப்படுத்தி, கரையை பலப்படுத்தும் பணியை பொதுப்பணித் துறை செய்து வருகிறது.
இந்நிலையில், சைதாப்பேட்டை பாலத்தின் கீழ் பகுதியில் மண் கொட்டி, நீரோட்டத்தை தடை செய்து, வெள்ள அபாயம் ஏற்படுத்தும் பணியை, நெடுஞ்சாலைத் துறை செய்து வருகிறது. இவை இரண்டும், முதல்வர் இ.பி.எஸ்.,சின் துறைகள் தான்.27 அடி இடைவெளிசைதாப்பேட்டை, அடையாறு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட, மறைமலை அடிகளார் பாலம், 600 அடி நீளம் கொண்டது. இதில், 27 அடி இடைவெளியில், 11 இடத்தில் துாண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆற்றில் வரும் தண்ணீர், துாண்களுக்கு இடைப்பட்ட கண்கள் வழியாக தடையின்றி செல்லும். பாலத்தை ஒட்டி, நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடம் உள்ளது.நெடுஞ்சாலைத் துறை சார்பில், சாலை, வடிகால் பணிக்காக தோண்டப்படும் மண் கழிவுகள், துாண்களுக்கு இடைப்பட்ட கண் பகுதியில் கொட்டப்படுகின்றன. இதனால், ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்லும்போது, நீரோட்டம் தடைபட்டு, தண்ணீர் திசைமாற வாய்ப்பு உள்ளது.
நீரோட்டத்திற்கு தடைஅடையாறு ஆறு, சைதாப்பேட்டை பகுதியில் இரண்டு இடத்தில் வளைந்து செல்கிறது. ஆதனுாரில் இருந்து, 40 கி.மீ., பயணித்து வரும் தண்ணீர், சைதாப்பேட்டையை அடையும்போது, கரை புரண்டு ஓடும்.அப்போது, நீரோட்டம் தடைபட்டு, தண்ணீர் குடியிருப்புகளில் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தும். கடந்த, 2015 வெள்ளப் பாதிப்பு போல், இனிமேல் வராமல் இருக்க, பொதுப்பணித் துறை சார்பில், பல கோடி ரூபாய் செலவில், ஆற்றில் துார் வாரி அகலப்படுத்தி, கரை பலப்படுத்தப்படுகிறது.
இதற்காக, இரவு பகலாக பணி நடக்கிறது.இந்த சூழலில், ஆற்றில் மண் கொட்டி, நீரோட்டத்திற்கு தடை செய்து, வெள்ள அபாயத்தை ஏற்படுத்தும் நெடுஞ்சாலைத் துறையின் செயல், நீர்நிலை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இந்த இரண்டு துறைகளுமே, முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது.ஆற்றை மேம்படுத்த வேண்டும் என, நீண்ட நாள் கோரிக்கை இருந்தும், 2015ம் ஆண்டு வெள்ளப் பாதிப்புக்கு பின், தமிழக அரசு, சிறப்பு கவனம் செலுத்தி பணி செய்கிறது.
மீண்டும் வெள்ளப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், மண் கொட்டும் நெடுஞ்சாலைத் துறையின் செயல் கண்டனத்துக்குஉரியது. கொட்டிய மண்ணை உடனே அகற்றி, தடையின்றி தண்ணீர் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.நீர்நிலை ஆர்வலர்கள்படம்: காளீஸ்வரன், செய்தி உண்டு : சிங்கராயன்அடையாறு ஆற்றில் வெள்ள ஆபாயம் ஏற்ப்படுத்தும் வகையில் நீரோட்டதிற்க்கு தடையாக ஆற்றில் மணல்களை கொட்டும் நெடுஞ்சாலைத்துறை.இடம் : மறைமலை அடிகளார் பாலம், சைதாப்பேட்டை . சிங்கராயன்அடையாறு ஆற்றில் வெள்ள ஆபாயம் ஏற்ப்படுத்தும் வகையில் நீரோட்டதிற்க்கு தடையாக ஆற்றில் மணல்களை கொட்டும் நெடுஞ்சாலைத்துறை.இடம் : மறைமலை அடிகளார் பாலம், சைதாப்பேட்டை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE