பொது செய்தி

இந்தியா

பீஹார் தேர்தல்: 5 மணி நிலவரப்படி 52.2 சதவீத ஓட்டுப்பதிவு

Updated : அக் 28, 2020 | Added : அக் 28, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
பாட்னா: பீஹார் சட்டசபைக்கு, முதல் கட்டமாக, 71 தொகுதிகளில் இன்று ஓட்டுப்பதிவு காலை 7:00 மணிக்கு துவங்கியது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுடன், இந்த தேர்தல் நடந்து வருகிறது.பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. பீஹார் சட்டசபைக்கு, மூன்று கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள, 243 தொகுதிகளில், முதல்
Nitish, BiharVote4SSRJustice, BiharPolls

பாட்னா: பீஹார் சட்டசபைக்கு, முதல் கட்டமாக, 71 தொகுதிகளில் இன்று ஓட்டுப்பதிவு காலை 7:00 மணிக்கு துவங்கியது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுடன், இந்த தேர்தல் நடந்து வருகிறது.

பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. பீஹார் சட்டசபைக்கு, மூன்று கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள, 243 தொகுதிகளில், முதல் கட்டமாக, 71ல், இன்று ஓட்டுப் பதிவு துவங்கி நடந்து வருகிறது. முதல் கட்ட தேர்தலில், 1,066 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 2.14 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள், ஓட்டளிக்க உள்ளனர்.


latest tamil newsமுதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய, தே.ஜ., கூட்டணி களத்தில் உள்ளது. சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி தனித்து போட்டியிடுகிறது. ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ் தலைமையில், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள், 'மெஹா' கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.


latest tamil news


Advertisementகொரோனா பரவல் துவங்கிய பின் நடத்தப்படும் முதல் சட்டசபை தேர்தல் இதுதான். இதையடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளன. வழக்கமாக. 1,600 வாக்காளர்களுக்கு, ஒரு ஓட்டுச் சாவடி அமைக்கப்படும். இம்முறை, 1,000 வாக்காளர்களுக்கு, ஒரு ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. ஓட்டளிப்பதற்கு முன், வாக்காளர்களுக்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் கையுறைகள் வழங்கப்பட உள்ளன. வாக்காளர்கள், முககவசம் அணிந்த வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, தபால் மூலம் ஓட்டளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.


latest tamil newsகொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமையில் இருப்பவர்கள் வசதிக்காக, ஓட்டுப்பதிவு ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவர்கள், கடைசி ஒரு மணி நேரத்தில் வந்து ஓட்டளிக்கலாம். தேர்தலுக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தலில் பதிவான ஓட்டுகள், நவ., 10ல் எண்ணப்படவுள்ளன.


latest tamil news

ஓட்டுப்பதிவு நிலவரம்


மாலை 5 மணியளவில் பீஹாரில் 52.20 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளன.பா.ஜ., வேட்பாளர் மீது வழக்கு


ஓட்டுச்சாவடிக்கு, கட்சி சின்னம் பொறித்த மாஸ்க்கை அணிந்து வந்ததற்காக, பா.ஜ., வேட்பாளர் பிரேம் குமார் மீது வழக்குப்பதிவு செய்ய கயா மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.


சிஆர்பிஎப் போலீசார் உதவி


latest tamil newsதேர்தலில் ஓட்டுப்போட வந்த முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ஓட்டுப்போடுவதற்கு சிஆர்பிஎப் வீரர்கள் உதவி செய்தனர்.


வெடிபொருட்கள் கண்டெடுப்பு


இந்நிலையில், அவுரங்காபாத்தின் திப்ரா பகுதியில், இன்று இரண்டு வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை கைப்பற்றிய சிஆர்பிஎப் போலீசார் அவற்றை பாதுகாப்பாக செயலிழக்க செய்தனர். இதனை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது


பிரதமர் வேண்டுகோள்


பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: பீஹார் சட்டசபைக்கு இன்று முதல்கட்ட தேர்தல் நடக்கிறது.ஜனநாயகத்திற்கான திருவிழாவில், கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் வாக்காளர்கள் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும்.6 அடி தூரம் சமூக இடைவெளியை கடைபிடிப்பதுடன், மாஸ்க் அணிய வேண்டும்.இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-அக்-202014:59:16 IST Report Abuse
IndiaTamilan Kumar(Nallathai  Ninaippom  Nallathey Nadakkum ) நல்லவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் . யார் நல்லவர்கள் என்பது தேர்தல் முடிவில் தெரியவரும்.
Rate this:
Cancel
மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி
28-அக்-202009:27:10 IST Report Abuse
மூல பத்திரம் பாஜக கூட்டணி வெற்றி பெற ஆண்டவனை வேண்டுகிறேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X