புதுடில்லி: ஜனநாயகத்திற்கான திருவிழாவில் பங்கேற்பதை வாக்காளர்கள் அனைவரும் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என பிரதமர் மோடி கேட்டு கொண்டுள்ளார்.
பீஹார் சட்டசபைக்கான முதல்கட்ட தேர்தல் இன்று துவங்கி நடந்து வருகிறது. முதல்கட்டமாக 71 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: பீஹார் சட்டசபைக்கு இன்று முதல்கட்ட தேர்தல் நடக்கிறது.ஜனநாயகத்திற்கான திருவிழாவில், கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் வாக்காளர்கள் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும்.6 அடி தூரம் சமூக இடைவெளியை கடைபிடிப்பதுடன், மாஸ்க் அணிய வேண்டும்.
बिहार विधानसभा चुनावों में आज पहले दौर की वोटिंग है।
सभी मतदाताओं से मेरा आग्रह है कि वे कोविड संबंधी सावधानियों को बरतते हुए, लोकतंत्र के इस पर्व में अपनी हिस्सेदारी सुनिश्चित करें।
दो गज की दूरी का रखें ध्यान, मास्क जरूर पहनें।
याद रखें, पहले मतदान, फिर जलपान!
— Narendra Modi (@narendramodi) October 28, 2020
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE