"இதில் யார் எங்கே ஏமாற்றம் அடைந்தனர். அரசியல்வாதிகள் சிலருக்கு தான் ஏமாற்றம்..."| Dinamalar

பொது செய்தி

இந்தியா

"இதில் யார் எங்கே ஏமாற்றம் அடைந்தனர். அரசியல்வாதிகள் சிலருக்கு தான் ஏமாற்றம்..."

Updated : அக் 28, 2020 | Added : அக் 28, 2020 | கருத்துகள் (16)
Share
இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இந்தாண்டு, 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட முடியாது என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, அதிர்ச்சியளிக்கிறது. மாணவர்களின் இறுதி நம்பிக்கையாக இருந்த நீதிமன்றமும், இட ஒதுக்கீட்டு உரிமையை நிராகரித்திருப்பது ஏமாற்றமளிக்கிறது.- தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்'இதில், எங்கே, யார் ஏமாற்றம்
வேல்முருகன், கங்கனா ரணாவத், துரை முருகன், ராஜு, திருமாவளவன்

இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இந்தாண்டு, 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட முடியாது என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, அதிர்ச்சியளிக்கிறது. மாணவர்களின் இறுதி நம்பிக்கையாக இருந்த நீதிமன்றமும், இட ஒதுக்கீட்டு உரிமையை நிராகரித்திருப்பது ஏமாற்றமளிக்கிறது.
- தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்


'இதில், எங்கே, யார் ஏமாற்றம் அடைந்தனர்; அரசியல்வாதிகள் சிலருக்குத் தான் ஏமாற்றம்...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் அறிக்கை.



எவ்வித தகுதியும் இல்லாமல், அரசியலில் வாரிசாக வந்தவர்களில், சுத்தமாக தகுதியே இல்லாதவர், மஹாராஷ்டிரா முதல்வர், உத்தவ் தாக்கரே தான்.
- பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்


'இப்படி, 'பட்'டென்று போட்டு உடைத்து விட்டீர்களே...' என, ஆச்சரியம் தெரிவிக்கத் தோன்றும் வகையில், பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் பேட்டி.



மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு விவகாரத்தில், கவர்னர் இன்னும் கையெழுத்திடாதது பாதிப்பில்லை என, பா.ஜ., கூறுவது தவறு. அவர்களை கேட்டால் எதுவுமே மக்களுக்கு பாதிப்பில்லை என்று தான் கூறுவர். கொரோனா கூட மக்களுக்கு பாதிப்பில்லை என்று தான் கூறுவர்.
- தி.மு.க., பொதுச் செயலர் துரை முருகன்


latest tamil news





'எப்படியோ, இட ஒதுக்கீடு விவகாரத்தை வைத்து, இன்னும் சில நாட்களுக்கு, அரசியல் செய்ய உங்கள் கட்சித் தலைவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது...' என, சொல்லத் தோன்றும் வகையில், தி.மு.க., பொதுச் செயலர் துரை முருகன் பேட்டி.



மின்சார கம்பிகள் மீது துணி காய போட்ட காலம், தி.மு.க., ஆட்சி காலம். தி.மு.க., ஒரு ரவுடி கட்சி. அதுபோல அரசியல் கட்சி இருக்கவே கூடாது. அதை அழிக்கும் வரை, அ.தி.மு.க., ஓயாது.
- அமைச்சர் ராஜு


'ஹிந்துக்கள் எல்லாரும் இளிச்சவாயன்களா இருக்கும் வரை, உங்க ரெண்டு கட்சிக்கும் கொண்டாட்டம் தான் போங்க...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ராஜு பேச்சு.



நான், தமிழக முதல்வராக வந்தால், மதுவை ஒழிக்கத்தான் முதல் கையெழுத்து போடுவேன். முதல்வராக வேண்டும் என, நான் ஆசைப்படக் கூடாதா... ஆசைப்பட்டால் என்ன தவறு?
- திருமாவளவன்


'எப்போதிலிருந்து, உங்களுக்கும் முதல்வர் ஆசை வந்தது; தி.மு.க., கூட்டணியில் இருந்தால், கிடைப்பது கடினமே...' எனக் கூறத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X