மதுரை: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தலைவராக உள்ள வி.எம்.கடோச், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக நியமனம்.
மதுரை மாவட்டம் தோப்பூரில் ரூ.1,264 கோடி திட்ட மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த 2018ம் ஆண்டு வெளியானது. அதைத் தொடர்ந்து 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் மோடி, மதுரை வந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். அதன்படி, தோப்பூரில், சுமார் 202 ஏக்கரில் 750 படுக்கை வசதியுடன் கட்டப்படும் என்றும், 48 மாதங்களில் நிறைவு பெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தலைவராக உள்ள டாக்டர் வி.எம்.கட்டோச் நியமனம் செய்யப்பட்டுள்ளார். எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் சுதா சேஷையன் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக சுகாதாரத்துறை சார்பில் அரசிதழிழும் வெளியிடப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE