ஊட்டி : ''பெண்களை இழிவுபடுத்தி பேசிய திருமாவளவனுக்கு ஆதரவு அளித்த தி.மு.க., வரும் தேர்தலில் அனைத்து சமுதாய மக்களின் ஓட்டுக்களை இழக்க போவது நிச்சயம்,'' என, பா.ஜ., மாநில பொருளாளர் சேகர் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம், ஊட்டியில், பா.ஜ., மகளிர் அணி சார்பில், திருமாவளவனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற பா.ஜ., மாநில பொருளாளர், சேகர் நிருபர்களிடம் கூறியதாவது:
பெண்களை இழிவுப்படுத்தி பேசிய திருமாவளவனை கண்டித்து, மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. இந்து சமுதாயம், உலக மகளிரை கொச்சைப்படுத்தி அவர் அவதுாறாக பேசியுள்ளார்.திருமாவளவனுக்கு ஸ்டாலின் ஆதரவு அளித்ததை வன்மையாக கண்டிக்கிறோம். வரும், சட்டசபை தேர்தலில், இதற்கு பதிலடி கிடைக்கும். அனைத்து சமுதாய மக்களின் ஒட்டு மொத்த ஓட்டுக்களை தி.மு.க., இழக்க போவது நிச்சயம்.லோக்சபா தேர்தலின்போது திருமாவளவன் அளித்த உறுதி ஆவணத்தில் செய்த முறைகேடு குறித்து விசாரித்து, மத்திய அரசு அவரது பதவியை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு, சேகர் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE