கேரள தங்க கடத்தல் வழக்கில் சிவசங்கரின் முன்ஜாமின் தள்ளுபடி: அமலாக்கத்துறை விசாரணை

Updated : அக் 28, 2020 | Added : அக் 28, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
திருவனந்தபுரம்: கேரள தங்க கடத்தல் வழக்கில் முன்ஜாமின் கோரியிருந்த சிவசங்கரின் மனுக்களை கேரளா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள், சிவசங்கரை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.கேரள தங்க கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஸ்வப்னாவுக்கும், கேரள மாநில தகவல் தொழில்நுட்பத்துறை செயலராகவும், முதல்வரின் தனிப்பிரிவுச் செயலராகவும் இருந்த
Kerala, GoldSmugglingCase, Sivasankar, HighCourt, Denies, Anticipatory, கேரளா, தங்க கடத்தல் வழக்கு, சிவசங்கர், ஐகோர்ட், உயர்நீதிமன்றம், முன்ஜாமின், தள்ளுபடி, அமலாக்கத்துறை, விசாரணை

திருவனந்தபுரம்: கேரள தங்க கடத்தல் வழக்கில் முன்ஜாமின் கோரியிருந்த சிவசங்கரின் மனுக்களை கேரளா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள், சிவசங்கரை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

கேரள தங்க கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஸ்வப்னாவுக்கும், கேரள மாநில தகவல் தொழில்நுட்பத்துறை செயலராகவும், முதல்வரின் தனிப்பிரிவுச் செயலராகவும் இருந்த சிவசங்கருக்கும், தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, சிவசங்கர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக, சிவசங்கரிடம் என்.ஐ.ஏ., மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர் கைது செய்யப்படுவதற்கான முகாந்திரம் இருப்பதாக, தகவல்கள் வெளியாகின.


latest tamil news


இதையடுத்து, கேரள உயர் நீதிமன்றத்தில், சிவசங்கர் தாக்கல் செய்த முன் ஜாமின் மனுவை விசாரித்த நீதிபதி, 'சிவசங்கரை, வரும், 23ம் தேதி வரை கைது செய்யக்கூடாது' என. உத்தரவிட்டார். சமீபத்தில் சிவசங்கருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, திருவனந்தபுரம் ஆயுர்வேத மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவரது முன்ஜாமின் மனுக்கள் மீது விசாரணை நடத்திய உயர்நீதிமன்றம், முன்ஜாமின் வழங்க மறுத்ததுடன், சிவசங்கரின் மனுக்களை தள்ளுபடி செய்தது. இதனையடுத்து, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்றனர். விசாரணையின் முடிவில் அவர் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMESH - CHENNAI,இந்தியா
28-அக்-202017:54:33 IST Report Abuse
RAMESH Nothing will happen.. Like PC case also initially going like this.. after that what happened? I think except laluprasad Yadav the NDA govt unable to arrest and send to Jail even filed so many cases against opp parties Corrupted MP & MLA against them scam.
Rate this:
Cancel
Amirthalingam Shanmugam - Trichy,இந்தியா
28-அக்-202016:47:40 IST Report Abuse
Amirthalingam Shanmugam சிறுவனாக இருக்கும்போது கேடி இப்படித்தான் இருப்பான் அதாவது லுங்கி கட்டிக்கொண்டு ,கருப்புவெள்ளை "டீ" சட்டை போட்டுக்கொண்டு "கடா" மீசை வைத்துக்கொண்டு ,சுருள் முடி வைத்துக்கொண்டு பார்த்தோம்.ஆனால் இன்று ரொம்ப படித்தவன் ,மெத்த படித்தவன் , பெரிய உத்தியோகத்தில் அதிகாரத்தில் இருப்பவன் , " மக்கள் சேவை " செய்பவன், சாமியாராக இருப்பவன் .....என்று நீட்டிக்கொண்டு போகலாம்.பசியெடுத்தால் எவ்வளவுதான் தின்பாங்களோ?
Rate this:
Cancel
s vinayak - chennai,இந்தியா
28-அக்-202015:06:49 IST Report Abuse
s vinayak எல்லோருமாக அலர்ட் ஆனபிறகு கைது, விசாரணை, மருத்துவ பரிசோதனை, ஜாமின், குற்றம் என்பதற்கான ஆதாரமின்மை, வழக்கு தள்ளுபடி, மீண்டும் பணிக்கு திரும்புதல், அரியர்ஸ் ஆக சம்பளத்தை மொத்தமாக விடுவிப்பது, மீண்டும் சீனியர் என்பதால் ப்ரமோஷன், ரிடையர்மெண்ட், பென்ஷன் இப்படியே தொடர்ந்து முடிந்துவிடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X