நிதிஷ்குமார் பாஜ., கூட்டணியை விட்டு வெளியேறுவார்: சிராக் பஸ்வான்

Updated : அக் 28, 2020 | Added : அக் 28, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
பாட்னா: தேர்தலுக்கு பிறகு, பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் பாஜ., கூட்டணியை விட்டு வெளியேறி ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியுடன் செல்ல ஆயத்தமாகியுள்ளதாக லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார்.பீஹார் சட்டசபைக்கான முதல்கட்ட தேர்தல் இன்று (அக்.,28) நடைபெற்று வருகிறது. 71 தொகுதிகளில் நடைபெறும் முதல்கட்ட தேர்தலில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா
BiharPolls, BiharAssemblyElections2020, ChiragPaswan, NitishKumar, BJP, RJD, பீஹார், சட்டசபை, தேர்தல், சிராக் பஸ்வான், நிதிஷ்குமார், பாஜக

பாட்னா: தேர்தலுக்கு பிறகு, பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் பாஜ., கூட்டணியை விட்டு வெளியேறி ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியுடன் செல்ல ஆயத்தமாகியுள்ளதாக லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

பீஹார் சட்டசபைக்கான முதல்கட்ட தேர்தல் இன்று (அக்.,28) நடைபெற்று வருகிறது. 71 தொகுதிகளில் நடைபெறும் முதல்கட்ட தேர்தலில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய, தே.ஜ., கூட்டணியும், காங்கிரஸ் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) தலைவர் தேஜஸ்வி யாதவ் தலைமையில், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் 'மெஹா' கூட்டணியும் போட்டியிடுகின்றன. சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி தனித்து போட்டியிடுகிறது.

இன்று காலை முதல் விறுவிறுப்பாக ஓட்டுப்பதிவு நடைபெற்று வரும்நிலையில், சிராக் பஸ்வான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது: நிதிஷ் குமாருக்கு மக்கள் வழங்கும் ஒவ்வொரு ஓட்டும் பீஹாரை பலவீனப்படுத்தி அழிப்பது மட்டுமல்லாமல், ஆர்.ஜே.டி மற்றும் மெஹா கூட்டணியை பலப்படுத்தும். நிதிஷ்குமார் தேர்தலுக்குப் பிறகு பாஜ., கூட்டணியை விட்டு வெளியேறி ஆர்ஜேடி.,யுடன் செல்ல ஆயத்தமாகியுள்ளார். இதற்கு முன்பு கூட, ஆர்.ஜே.டி.,யின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளார்.


latest tamil news


பீஹார் மாநிலம் முதல் 15 ஆண்டுகள் வளர்ச்சியே இல்லாமல் பிரபலமற்று இருந்தது. அடுத்த 15 ஆண்டுகளில் மோசமான நிலையில் இருந்தது. ஆனால் தற்போது உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்களுடனும், நாங்கள் (லோக் ஜனசக்தி) பீஹார் மக்களுக்கு முன்னுரிமை மற்றும் நிதிஷ் குமார் இல்லாத அரசை உருவாக்க வேண்டும். நிதிஷ்குமார் கட்சியை விட லோக் ஜனசக்தி கட்சி அதிக இடங்களில் போட்டியிடுகிறது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியை விட நாங்கள் அதிக இடங்களை வென்ற பிறகு, பாஜ., - லோக் ஜனசக்தி கூட்டணி அரசு அமையும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Saravanan - Chennai,இந்தியா
28-அக்-202017:13:18 IST Report Abuse
Saravanan எதிர்க்கட்சி பத்து இடம் கூட ஜெயிக்கலேன்னா வேற என்ன பண்ணுவாங்க. நிதிஷ் ஆளும் கட்சி, பா ஜ க எதிர் கட்சியா இருப்பாங்க. பய புள்ள என்னமா பயந்து போயிருக்கு
Rate this:
Cancel
28-அக்-202015:00:53 IST Report Abuse
Indian Kumar ( Nallavarkal  Aatchikku VARAVENDUM ) தேர்தல் முடிவில் தெரிய வரும் இவரது பலம் , ஆசை யாரை விட்டது.
Rate this:
Cancel
28-அக்-202014:09:16 IST Report Abuse
chandran, pudhucherry இப்படி சொன்னா உனக்கு ஓட்டு விழுங்கற
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X