பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பாதிப்பில் இருந்து தமிழகம் மீள்கிறது : முதல்வர் பழனிசாமி

Updated : அக் 28, 2020 | Added : அக் 28, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை: தமிழகம் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருகிறது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.தமிழகத்தில், மார்ச் முதல் கொரோனா ஊரடங்கு பிறக்கப்பட்டது. பின்னர், படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக, மருத்துவக் குழு மற்றும் மாவட்ட கலெக்டர்களுடன், மாதம்தோறும், முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். அதன்படி, நடப்பு
தமிழகம், கொரோனா, கோவிட்19, முதல்வர்பழனிசாமி, முதல்வர்

சென்னை: தமிழகம் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருகிறது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில், மார்ச் முதல் கொரோனா ஊரடங்கு பிறக்கப்பட்டது. பின்னர், படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக, மருத்துவக் குழு மற்றும் மாவட்ட கலெக்டர்களுடன், மாதம்தோறும், முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். அதன்படி, நடப்பு மாதத்திற்கான ஆலோசனைக் கூட்டம், இன்று நடந்தது.


latest tamil news


இந்த கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது: தமிழகம் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருவதாக ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. டெங்கு பருவகால நடவடிக்கைகளை தடுக்க மாவட்ட கலெக்டர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். காய்ச்சல் முகாம்களை தொடர்ந்து நடத்த வேண்டும். பருவமழை காலத்தில் அவசர கால முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.


தியேட்டர்கள்

சினிமா தியேட்டர்களை திறப்பது குறித்து கலெக்டர்கள் மற்றும் வல்லுநர்கள் குழுவுடன் ஆலோசனைக்கு பிறகு அவர்கள் தரும் அறிக்கையின் படி முடிவு செய்யப்படும். பண்டிகை காலத்தில் கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் முறையாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். கொரோனா காலத்தில், அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கிய பொதுமக்களுக்கு நன்றி. இவ்வாறு முதல்வர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
periasamy - Doha,கத்தார்
29-அக்-202012:35:48 IST Report Abuse
periasamy கொரோன ஒரு இயற்க்கை பேரழிவு அது பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கிவிட்டது ஒரு கட்டத்தில் தானே வீரியமிழந்து அடங்கி விடும் வரை மக்கள் கவனமாக இருக்க வேண்டும் எடப்பாடி இதுமாதிரி டயலாக் நிறை பேசியுள்ளார் கொஞ்சம் அடக்கி வாசிங்க முதல்வரே இப்பவே நிறைய ஆசாமிகள் சரியாக தற்காப்பு சாதனைகளை பயன்படுத்தவில்லை நீங்க நான்தான் என்ற அகந்தையில் மார்தட்டினால் கொரோனா கூடிவிடும் மரியாதைக்கு அடக்கி வாசிங்க முதல்வர்
Rate this:
Cancel
DAMAL - CHENNAI,இந்தியா
29-அக்-202008:58:19 IST Report Abuse
DAMAL ஏப்ரல் க்குள் கொரானா இல்லாத மாநிலம் இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டும்தான்........அவ்வளவு கன்றோல்
Rate this:
Cancel
Partha - Chennai,இந்தியா
28-அக்-202019:58:17 IST Report Abuse
Partha தமிழகத்தில் இன்னும் ஒழியவில்லை ஒழியவில்லை இன்னும் இரண்டொரு மாதங்கள் சென்றால் தான் தெரியும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X