பரூக், மெஹபூபா ஆகியோர் இந்தியாவில் வாழ உரிமை இல்லாதவர்கள்: மத்திய அமைச்சர் ஆவேசம்

Updated : அக் 28, 2020 | Added : அக் 28, 2020 | கருத்துகள் (28)
Share
Advertisement
புதுடில்லி: பரூக் அப்துல்லா, மெஹபூபா முப்தி ஆகியோர் இந்தியாவில் வாழ உரிமை இல்லாதவர்கள் என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.ஜம்மு - காஷ்மீரில், தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி உட்பட ஆறு கட்சிகள் இணைந்து, புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன. ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து பெற்று தருவதற்காக இந்தக் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாக,
MehboobaMufti, FarooqAbdullah, NoRight, ToStay, InIndia, UnionMinister, PralhadJoshi, மெஹபூபா முப்தி, பரூக் அப்துல்லா, இந்தியா, வாழ, உரிமையில்லாதவர்கள், மத்திய அமைச்சர், பிரகலாத் ஜோஷி

புதுடில்லி: பரூக் அப்துல்லா, மெஹபூபா முப்தி ஆகியோர் இந்தியாவில் வாழ உரிமை இல்லாதவர்கள் என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீரில், தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி உட்பட ஆறு கட்சிகள் இணைந்து, புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன. ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து பெற்று தருவதற்காக இந்தக் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாக, அவர்கள் கூறி வருகின்றனர். இதற்கு தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா தலைவராகவும், மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெஹபூபா முப்தி, துணைத் தலைவராகவும் இருப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, காஷ்மீர் கொடி, தேசிய கொடி குறித்து மெஹபூபா முப்தி சர்ச்சை கருத்தை பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.


latest tamil news


இந்நிலையில், மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி செய்தியாளர்களிடம் கூறியதாவது: மெஹபூபா முப்தி மற்றும் பரூக் அப்துல்லா ஆகியோர் இந்தியாவில் வாழ உரிமை இல்லாதவர்கள். அவர்களில் ஒருவர் சீனாவின் உதவியுடன், 370வது சட்டப்பிரிவை நாங்கள் மீண்டும் கொண்டு வருவோம் என கூறுகிறார். சீனா, நம் மீது தாக்குதல் நடத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் இதுபோன்ற பேச்சுகளை வெளியிடும் இவர்கள் சர்வதேச சமூகத்திற்கு என்ன செய்தியை கூற வருகிறார்கள்?. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Magath - Chennai,இந்தியா
28-அக்-202021:24:11 IST Report Abuse
Magath இந்தியாவின் பிரதமர் நேரு இல்ல. நரேந்திரமோடி. தேச துரோகத்துக்கு நாடு கடத்தப்படூவீர்கள்.
Rate this:
Cancel
mathimandhiri - chennai,இந்தியா
28-அக்-202021:10:32 IST Report Abuse
mathimandhiri ராஜதுரோக குற்றத்துக்கான தணடனை இவர்கள் நேசிக்கும் நாட்டில் என்ன தெரியுமா? இவர்களுக்கு மட்டும் இங்கு ஏன் இவ்வளவு சலுகை ? தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் ஆபத்து பெருகிக் கொண்டே இருக்கும். மறுபடியும் அடையுங்கள் உள்ளே.
Rate this:
Cancel
Muthuraman - Wasington DC,யூ.எஸ்.ஏ
28-அக்-202020:27:52 IST Report Abuse
Muthuraman உண்மையிலேயே பாரூக்கை சீனாவுக்கும் மெஹபூபாவை பாகிஸ்தானுக்கும் அனுப்பிவிட்டால் எல்லா பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்.. இந்திய மக்களின் பணத்தில் சுகபோக வாழ்வு வாழ்ந்துகொண்டு இந்தியாவுக்கே எதிராக பேசும் இப்படிப்பட்ட ஜென்மங்களை கடவுள் கூட மன்னிக்கமாட்டார். .இப்படிப்பட்ட கீழ்த்தனமான மக்களை மோடி ஏன் இன்னும் ஒன்றும் செய்யவில்லை என்பதே என் கேள்வி...மீண்டும் அவர்களை வீட்டு காவலில் ஒரு பத்து ஆண்டுகள் வைத்தால் கூட நல்லது தான்..நாடும் மக்களும் பிழைத்துக்கொள்வார்கள்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X