பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியது

Updated : அக் 28, 2020 | Added : அக் 28, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை துவங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகம் மற்றும் கேரளாவில் வடகிழக்கு பருவமழை இன்று(அக்., 28) முதல் துவங்கியது. நடப்பாண்டில் சராசரி அளவையொட்டி வடகிழக்கு பருவமழை இருக்கும். தமிழகத்தில், வடகிழக்கு பருவமழையின் சராசரி அளவு 44 செ.மீ., ஆகும். இந்தாண்டு
தமிழகம், வடகிழக்குபருவமழை,  சென்னைவானிலை,

சென்னை: தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை துவங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகம் மற்றும் கேரளாவில் வடகிழக்கு பருவமழை இன்று(அக்., 28) முதல் துவங்கியது. நடப்பாண்டில் சராசரி அளவையொட்டி வடகிழக்கு பருவமழை இருக்கும். தமிழகத்தில், வடகிழக்கு பருவமழையின் சராசரி அளவு 44 செ.மீ., ஆகும். இந்தாண்டு சராசரி மழை அளவு இயல்பை யொட்டியோ அல்லது அதற்கு அதிகமாகவோ இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


latest tamil news




அடுத்த 48 மணி நேரத்திற்கு தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நெல்லை, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murugesan Ppm - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
28-அக்-202014:29:31 IST Report Abuse
Murugesan Ppm வடகிழக்கு பருவமழையை வரவேற்போம் ....தமிழகத்தின் நீர் தேவையை பூர்த்திசெய்யும் வடகிழக்கு பருவமழை வருக ....
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
28-அக்-202014:18:10 IST Report Abuse
Ramesh Sargam கூடவே துவங்கியது, மழை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளும். இந்த முறையாவது அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமா? எடுத்துட்டாலும்...
Rate this:
Cancel
நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா
28-அக்-202013:48:37 IST Report Abuse
நந்தினி திவ்ய பாரதி நள்ள நனயூனும் ரெயின் ல ஹாயா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X