பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் 22 இடங்களில் ஐ.டி., 'ரெய்டு'

Updated : அக் 28, 2020 | Added : அக் 28, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
சென்னை: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 22 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.தமிழகத்தில் சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 22 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். வரி ஏய்ப்பு தொடர்பாக இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. கல்வி நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
IncomeTax, Raid, Chennai, Coimbatore, Erode, Tripur, DMK, வருமானவரித்துறை, ரெய்டு, சோதனை, சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர், திமுக, பொறுப்பாளர்

சென்னை: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 22 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

தமிழகத்தில் சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 22 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். வரி ஏய்ப்பு தொடர்பாக இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. கல்வி நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

அதேபோல், கோவை மாநகர் திமுக மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையாக் கவுண்டர் என்ற கிருஷ்ணன் என்பவர் வீட்டிலும் சோதனை செய்தனர்.


latest tamil news



பையாக் கவுண்டர் வீ்ட்டில் 7 வருமானவரித்துறை அதிகாரிகள் பகல் 12 மணியளவில் சோதனையிட சென்றனர். ஆனால் அவர் ஈரோடில் இருந்ததால் தகவலறிந்து கோவைக்கு விரைந்தார். பின்னர், பகல் 1.45 மணியளவில் பையா கவுண்டர் வீட்டில் அதிகாரிகள் சோதனையை நடத்தினர்.

திருப்பூரில் புது ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள பனியன் ஏற்றுமதி நிறுவனத்திலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். இந்நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஸ்ரீதரன் மற்றும் சுந்தரம் ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
28-அக்-202019:41:21 IST Report Abuse
Tamilnesan சோதனை முடிவில் கைது செய்து பத்து வருடங்கள் சிறையில் அடைக்கப்பட வேண்டும். ஆனால், இதை நிச்சயம் அரசு செய்யாது. ஒரு ஏழை உதிரம் சிந்தி ஒரு லட்சம் ரூபாய் வைத்திருந்தால் வருமான வரி துறை, அமலாக்க துறை, மத்திய புலனாய்வு துறை போன்ற துறை மார்கள் ஆயிரம் கேள்விகள் கேட்பார்கள். அரசியல்வியாதிகள் என்றால் ஐம்புலன்களும் அடக்கி வாசிப்பார்கள். ஜெய் ஹிந்த்.
Rate this:
Cancel
Sivaji Balakrishnan - CHENNAI,இந்தியா
28-அக்-202017:17:03 IST Report Abuse
Sivaji Balakrishnan பிடிபட்ட பணத்திற்கு வரியும், தாமதத்திற்கான வட்டியும், தவறுக்கு அபராதமும் கட்டி விட்டால், தண்டனை கிடைக்காது. நமது சட்டம் அப்படித்தான் உள்ளது. இதை தெரிந்துகொள்ளாமல், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவில்லை என்று சொல்வது தவறு.
Rate this:
Cancel
28-அக்-202016:53:57 IST Report Abuse
நக்கல் அந்த முக குடும்பத்தில் ரெய்டு நடத்தி அத்தனை பேரையும் உள்ள தூக்கி வெச்சு அவங்க சொத்துக்கள் மொத்தமும் பறிமுதல் செய்யணும்... இது நடக்கும் நாள் பொன்னாள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X