பரிதாபாத் : 'லவ் ஜிஹாத்' காரணமாக ஹரியானாவில் இளம் பெண் ஒருவர் பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் குற்றவாளியை உடனே என்கவுன்டர் செய்ய வேண்டும் என சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் கொந்தளித்துள்ளனர்.
ஹரியானா மாநிலம் பரிதாபாத் மாவட்டத்தின், பல்லப்கர் என்ற இடத்தில் 21 வயது கல்லுாரி மாணவியான நிகிதா தோமர் என்பவர் தேர்வு எழுதிவிட்டு, கல்லுாரியை விட்டு வெளியே வந்தார். அப்போது அங்கு வந்த இருவர், மாணவியை கட்டாயப்படுத்தி காரில் தங்களுடன் அழைத்துச் செல்ல முயன்றனர். மாணவி மறுக்கவே, அவரை துப்பாக்கியால் சுட்டு, இருவரும் காரில் தப்பினர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிகிதா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பட்டப்பகலில் நடந்த இந்த கொடூர சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
சிசிடி டிவி கேமராவின் உதவியோடு முக்கிய கொலை குற்றவாளியான தவுசிப்பும், அவனது நண்பனும் சில மணிநேரங்களில் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். ஏற்கனவே நிகிதாவிற்கு லவ் டார்ச்சர் கொடுத்துள்ளார் தவுசிப். இதுதொடர்பாக தவுசிப் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த கொலை நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

ஆனால் பெண்ணின் பெற்றோரும், உறவினர்களும் கூறுகையில், ''வேறு மதத்தைச் சேர்ந்த இளம் பெண்களை காதலித்து, கட்டாய மத மாற்றத்திற்கு உட்படுத்தும், 'லவ் ஜிகாத்' காரணமாக, மாணவி படுகொலை செய்யப்பட்டதாக'' குற்றம் சாட்டி உள்ளனர். நிகிதாவை லவ் டார்ச்சர் செய்ததோடு, மதம் மாறி திருமணம் செய்ய வேண்டும் என தவுசிப் கட்டாயப்படுத்தியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இறந்த பெண்ணுக்கு நீதி வேண்டி அம்மாநிலத்தில் தொடர் போராட்டங்கள் நடக்கின்றன.
இந்நிலையில் ''பெண்கள் மீது தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதை தடுக்க கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும்'' என சமூகவலைதளங்களில் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இன்னும் சிலரோ, ''மெல்ல லவ் ஜிகாத் தலைதூக்குவதாகவும் இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும்'' என கருத்து தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர், ''குற்றவாளியான தவுசிப்பை என்கவுன்டர் செய்ய வேண்டும்'' என தங்களது கோபத்தை பதிவிட்டு வருகின்றனர்.
இதனால் நேற்று முதலே டுவிட்டரில் இந்த விவகாரம் #NikitaMurderCase, #justiceforNikitaTomar, #weWantEncounterOfToufeeq, #lovejihaad உள்ளிட்ட ஹேஷ்டாக்குகளில் தேசிய அளவில் டிரெண்டிங் ஆனது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE