பொது செய்தி

இந்தியா

ஆரோக்கிய சேது செயலியை உருவாக்கியது யார்?: மத்திய மின்னணு அமைச்சகம் பதில்

Updated : அக் 28, 2020 | Added : அக் 28, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: ஆரோக்கிய சேது செயலியை யார் உருவாக்கியது, எப்படி உருவாக்கப்பட்டது என்ற எந்த தகவலும் இல்லை என மத்திய மின்னணு அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்தியாவில் கொரோனா பரவலை கண்காணிக்க மத்திய அரசு, 'ஆரோக்கிய சேது' என்ற செயலியை அறிமுகம் செய்தது. இச்செயலியை பயன்படுத்தி, மற்றொரு ஆரோக்கிய சேது செயலி பயன்பாட்டாளரின் உடல்நிலையை அறிவது மட்டுமின்றி, கொரோனா
ArogyaSethuApp, MinistryOfElectronics, RTI, WhoCreated, NoInformation, NIC, NeGD,

புதுடில்லி: ஆரோக்கிய சேது செயலியை யார் உருவாக்கியது, எப்படி உருவாக்கப்பட்டது என்ற எந்த தகவலும் இல்லை என மத்திய மின்னணு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவலை கண்காணிக்க மத்திய அரசு, 'ஆரோக்கிய சேது' என்ற செயலியை அறிமுகம் செய்தது. இச்செயலியை பயன்படுத்தி, மற்றொரு ஆரோக்கிய சேது செயலி பயன்பாட்டாளரின் உடல்நிலையை அறிவது மட்டுமின்றி, கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளிட்ட விவரங்களை தெரிந்துக்கொள்ள முடியும். இதன்மூலம், கொரோனா பாதிக்கப்பட்டோரிடம் இருந்து சமூக விலகலை கடைப்பிடிக்கவும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை கண்டறியவும் உதவிப்புரிந்தது.


latest tamil news


அதுமட்டுமின்றி, கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர், எங்கெல்லாம் சென்றிருக்கிறார் என்றும், அவர் மூலம் யாருக்கெல்லாம் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் அறிந்து, அவர்களை தனிமைப்படுத்த இந்த செயலி உதவுகிறது. இது போன்று பல நன்மைகளை கொண்ட ஆரோக்கிய சேது செயலி மூலம் தனிநபர் விவரங்கள் திருடப்படுவதாக குற்றச்சாட்டுகளும் எழுந்தன. ஆனால், மத்திய அரசு அதனை திட்டவட்டமாக மறுத்தது.

இந்நிலையில், செயலி குறித்து தகவலறியும் உரிமை சட்டத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு தற்போது மத்திய மின்னணு அமைச்சகம் அளித்த பதிலில், ஆரோக்கிய சேது செயலியை யார் உருவாக்கியது, எப்படி உருவாக்கப்பட்டது என்ற எந்த தகவலும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
29-அக்-202005:08:21 IST Report Abuse
skv srinivasankrishnaveni நல்லவிஷயம்க்கு தான் இசெயலி செயல்படும் என்றால் வரவெப்போம் இதுலேயும் பிராடுகளேதான் ஐக்கியம் என்றால் ஒன்னும் செய்யமுடியாது , வீடுகளில் பூஜைக்கு போக்கல்வேண்டும் என்றுபூச்செடிகள் வைக்கிறோம் ஆனால் கண்டவாலும் ராவோடுறாவாக செடிகளிமோட்டை அடிப்பாங்களே அதுபோலவேதான் இந்த செயலையும் செயல்படலாமா என்னமோ
Rate this:
Cancel
Janarthanan (குடும்ப ஆட்சிக்கு முடிவுரை எழுத வேண்டும்) நிதி ஆயோக் ஒரு விவாத மேடையில் இந்தியாவின் briiliant minds . இதில் ஈடு பட்டுள்ளதாக தெரிவித்து இருந்தார் ... ரகசிய காக்கவே இதை கூறாமல் இருக்க கூடும்
Rate this:
Cancel
Janarthanan (குடும்ப ஆட்சிக்கு முடிவுரை எழுத வேண்டும்) அதை தெரிந்து என்ன செய்ய போகிறார்கள் ??? ஏன் பாதுகாப்பு கருதி கூட கூறாமல் இருக்கலாம் , இந்தியாவில் இப்படி ஒரு அறிவாற்றல் திறன் கூடிய நபர் வெளியில் தெரிய படுத்தி அண்டை நாட்டில் இருந்து ஆபத்தை உருவாக்க பார்க்கிறது லோபி கூட்டம் ????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X