பொது செய்தி

இந்தியா

ரூ.500 கோடி ஊழல் - ஐ.டி., ரெய்டால் வெளிச்சத்திற்கு வந்தது

Updated : அக் 28, 2020 | Added : அக் 28, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement
புதுடில்லி: டேட்டா என்ட்ரி ஆபேரட்டிங் நிறுவனங்களில் நடந்த வருமான வரித்துறையினர் சோதனையில் ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.500 கோடி ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.மோசடியாக பில்களை உருவாக்கி போலி நிறுவனங்கள் மூலம் கருப்பு பணத்தை மாற்றி தரும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் குறித்து வருமான வரித்துறையினருக்கு தகவல் கிடைத்தது. டில்லி, ஹரியானா, பஞ்சாப்,
IncomeTax, Raid, DataScam, Rs500Crore, 42Locations, வருமானவரித்துறை, ரெய்டு, சோதனை, ஊழல்

புதுடில்லி: டேட்டா என்ட்ரி ஆபேரட்டிங் நிறுவனங்களில் நடந்த வருமான வரித்துறையினர் சோதனையில் ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.500 கோடி ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மோசடியாக பில்களை உருவாக்கி போலி நிறுவனங்கள் மூலம் கருப்பு பணத்தை மாற்றி தரும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் குறித்து வருமான வரித்துறையினருக்கு தகவல் கிடைத்தது. டில்லி, ஹரியானா, பஞ்சாப், உத்தரகண்ட் மற்றும் கோவா முழுவதும் 42 இடங்களில் நேற்று முன்தினம்(அக்.,26) ரெய்டு நடந்தது. இந்த ரெய்டுகள் மூலம் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களுடன் தொடர்புடைய நிறுவனங்கள், இடைத்தரகர்கள், பணம் கையாளுபவர்கள் என முழு நெட்வொர்க்கையும் கண்டறிந்துள்ளதாக வருமான வரித்துறை கூறியுள்ளது.


latest tamil news


இந்த ரெய்டில் ரூ.2.37 கோடி ரொக்கம், ரூ.2.89 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 17 வங்கி லாக்கர்களை கண்டுபிடித்துள்ளனர். போலி பில்கள் உருவாக்கி ரூ.500 கோடி அளவுக்கு மோசடியாக கணக்கில் வராத பணத்தை மாற்றியிருப்பதும் தெரியவந்தது. டேட்டா என்ட்ரி நிறுவனங்கள் கணக்கில் வராத பணத்தை மாற்றுவதற்கு போலி நிறுவனங்களை பயன்படுத்தியுள்ளன. அந்நிறுவனங்களுக்கு தங்கள் ஊழியர்கள், உறவினர்களை டம்மி இயக்குனர்களாக்கி கட்டுப்பாட்டில் வைத்திருந்துள்ளனர்.


latest tamil news


இந்த போலி நிறுவனங்களை உருவாக்க வங்கி அதிகாரிகளும் உதவியுள்ளது ஆரம்ப விசாரணையில் தெரிய வந்துள்ளது. கணக்கில் வராத பணத்தை மாற்றி நாட்டிலுள்ள முக்கிய நகரங்களில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்துள்ளனர். வங்கி வைப்பு நிதியில் பெரும் முதலீடுகளை போட்டுள்ளனர். டேட்டா என்ட்ரி நிறுவன ஊழியர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் இந்த பணம் எப்படி எல்லாம் கைமாறி போயிருக்கிறது என்பதை கூறியுள்ளதாகவும், வரும் நாட்களில் அதிரடி நடவடிக்கை இருக்கும் எனவும் ஐ.டி., அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
29-அக்-202016:54:01 IST Report Abuse
Endrum Indian கடைசியில் இதன் முடிவு தான் வெறும் ரெய்டு ரெய்டு ரெய்டு அப்புறம் மவுனம் மாவனம் மவுனம். ரெயிடு தவறு கண்டு பிடித்தல் அந்த பணம் அரசு கருவூலத்தில் சேர்க்கப்படவேண்டும். தவறு செய்தவர்கள் கண்டோம் விசாரணை செய்தோம் சுட்டோம் என்று ஒரு புல்ஸ்டாப் வைங்கப்பா.
Rate this:
Cancel
M.Selvam - Chennai/India,இந்தியா
29-அக்-202005:08:49 IST Report Abuse
M.Selvam அப்படியே அந்த கண்டெய்னர் லாரி 500 கோடி விஷயத்தையும் கண்டு பிடிச்சு சொல்லுங்க ஆபீசர்ஸ்... எவ்வளோ நாங்க காத்திருப்பது?? 2016 நடந்த ரைடுகள் என்ன ஆச்சு ..எல்லாமே ஒரு பக்கம் நடந்தால் சந்தேகம் வருதில்லே...
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
29-அக்-202004:52:23 IST Report Abuse
skv srinivasankrishnaveni ஹைடெக் கள்ளர்களா சூபெருங்கோ எல்லோரியும்பிடிச்சு வெளியேவரவே முடியாதபடி தனிச்செல்களிலே அடைக்கவேண்டும் பெதம்பாக்காமல் பெஸ்ட் என்றால் திஹார் போல இல்லீங்க அந்தமான் சிறைபோல அDAIக்கணும்
Rate this:
DAMAL - CHENNAI,இந்தியா
29-அக்-202008:54:56 IST Report Abuse
DAMALமுன்னாடி நடந்த ரெய்டுக்கு தீர்ப்பு வந்த மாதிரியா ?...
Rate this:
M.Selvam - Chennai/India,இந்தியா
29-அக்-202015:36:09 IST Report Abuse
M.Selvamரைடு நடத்திய கட்சி முதுகில் சவாரி செஞ்சால்தானே நோட்டா வை வென்று வாகை சூட முடியும்.. :)...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X