பா.ஜ.,மகளிரணி தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்

Updated : அக் 28, 2020 | Added : அக் 28, 2020 | கருத்துகள் (38)
Share
Advertisement
புதுடில்லி:பா.ஜ., மகளிரணி தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.,நட்டா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:தமிழத்தில் வரும் 2021ம் ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இத் தேர்தலில் பா.ஜ., குறிப்பிடத்தக்க அளவில் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்பு காட்டி வருகிறது. இதன் ஒரு கட்டமாக

புதுடில்லி:பா.ஜ., மகளிரணி தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.



latest tamil news



இது குறித்து கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.,நட்டா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:தமிழத்தில் வரும் 2021ம் ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இத் தேர்தலில் பா.ஜ., குறிப்பிடத்தக்க அளவில் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்பு காட்டி வருகிறது. இதன் ஒரு கட்டமாக தமிழகத்தை சேர்ந்த வானதி சீனிவாசனுக்கு கட்சியின் மகளிரணி தேசிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் உடனடியாக நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



கோவையை சேர்ந்த வானதி சீனிவாசன் தற்போது தமிழக பா.ஜ.,வின் துணை தலைவராக இருந்து வருகிறார். வக்கீலான இவர் கடந்த 1993 ம் ஆண்டு பா.ஜ.,வில் இணைந்தார். கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ள இவர் தற்போது தேசிய அளவிலான பதவியை பெற்றுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
29-அக்-202019:12:27 IST Report Abuse
Malick Raja இவரின் சொத்துக்கள் குறித்த தகவல்கள் வர தொடங்கி இருப்பது .. இவருக்கு இழுக்காக இருக்குமாம்
Rate this:
Cancel
A.Gomathinayagam - chennai,இந்தியா
29-அக்-202014:43:30 IST Report Abuse
A.Gomathinayagam தரம் வாய்ந்த ,பண்பு நிறைந்த தலைவர் ,தங்கள் தரத்திற்கு மற்றவர்களையும்உருவாக்குங்கள்
Rate this:
Cancel
periasamy - Doha,கத்தார்
29-அக்-202012:22:40 IST Report Abuse
periasamy வாழ்த்துக்கள் சகோதரி மிகவும் நல்லவர் அனால் தமிழர்களின் எதிக் கட்சியில் உள்ள நல்லவர்களின் இவரும் ஒருவர்
Rate this:
29-அக்-202013:49:17 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டுஉன்ன மாதிரி பொய்ப்பேர் சுமத்த ... ஆதரவு டேஞ்சர் சகோதரி இனிமே கவனமா இருக்கணும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X