சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : அக் 28, 2020
Share
Advertisement
செவ்வாயில் 'இன்டர்நெட்'அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன சி.இ.ஓ., எலன் மாஸ்க், 2025ம் ஆண்டுக்குள் செவ்வாய் கிரகத்தில் ஒரு லட்சம் பேரை குடியமர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளார். இதன் ஒரு பகுதியாக செவ்வாயை சுற்றி நட்சத்திரக் கூட்டத்தை போல, 'ஸ்டார்லிங்க்' செயற்கைக்கோள்களை நிறுவ ஸ்பேஸ் எக்ஸ் திட்டமிட்டுள்ளது. இது பூமி - செவ்வாய் இடையே தகவல் தொடர்பு கருவியாக செயல்பட்டு,

செவ்வாயில் 'இன்டர்நெட்'

அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன சி.இ.ஓ., எலன் மாஸ்க், 2025ம் ஆண்டுக்குள் செவ்வாய் கிரகத்தில் ஒரு லட்சம் பேரை குடியமர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளார். இதன் ஒரு பகுதியாக செவ்வாயை சுற்றி நட்சத்திரக் கூட்டத்தை போல, 'ஸ்டார்லிங்க்' செயற்கைக்கோள்களை நிறுவ ஸ்பேஸ் எக்ஸ் திட்டமிட்டுள்ளது. இது பூமி - செவ்வாய் இடையே தகவல் தொடர்பு கருவியாக செயல்பட்டு, செவ்வாயில் குடியேறும் மக்களுக்கு இன்டர்நெட் வசதியை அளிக்கும். இது ஒரு கடினமான திட்டம் என ஸ்பேஸ் எக்ஸ் சி.ஓ.ஓ., ஷாட்வெல் தெரிவித்துள்ளார்.


தகவல் சுரங்கம்



இரண்டாவது சிகரம்

பூமியில் கடல் மட்டத்தில் இருந்து 23,622 அடி உயரத்தில் 109 மலைகள் உள்ளன. இதில் பெரும் பாலும் இந்திய, ரஷ்ய துணைக்கண்ட பகுதியில் உள்ளன. உலகின் மிக உயரமான சிகரம் எவரெஸ்ட். இப்பட்டியலில் இரண்டாவது உயரமான சிகரம் 'கே 2'. இது கடல் மட்டத்தில் இருந்து 28251 அடி உயரத்தில் உள்ளது. இது கரோகராம் மலைத்தொடரில் உயரமான சிகரம். 1954ல் முதன்முறையாக அச்சலி, லினோ என்ற இருவர் இதில் ஏறி சாதித்தனர். 2018 ஜூன் கணக்கின் படி, 367 பேர் இச்சிகரத்தில் ஏறியுள்ளனர். மலை ஏற்றத்தின் போது 86 பேர் பலியாகியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X