பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் இதுவரை 1.97லட்சம் பேர் டிஸ்சார்ஜ்

Updated : அக் 28, 2020 | Added : அக் 28, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் இன்று (அக்.,28) அதிகபட்சமாக சென்னையில் 957பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் அங்கு இதுவரை 1.97 லட்சம் பேர் வீடு திரும்பியுள்ளனர்.தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 688 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன்மூலம் அங்கு இதுவரை 1,97,751பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, கோவையில் 218 பேருக்கும், சேலத்தில் 147

சென்னை: தமிழகத்தில் இன்று (அக்.,28) அதிகபட்சமாக சென்னையில் 957பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் அங்கு இதுவரை 1.97 லட்சம் பேர் வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 688 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன்மூலம் அங்கு இதுவரை 1,97,751பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, கோவையில் 218 பேருக்கும், சேலத்தில் 147 பேருக்கும், செங்கல்பட்டில் 150பேருக்கும், திருவள்ளூரில் 138பேருக்கும், திருப்பூரில் 96 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 86 பேருக்கும், நீலகிரியில் 30 பேருக்கும், ஈரோடில்155 பேருக்கும், நாமக்கல் 52 பேருக்கும், வேலூரில் 72 பேருக்கும், தஞ்சாவூரில் 51 பேருக்கும், மதுரையில் 51 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.



latest tamil news





உயிரிழப்பு



இன்று சென்னையில் 9 பேரும், திருப்பூர், செங்கல்பட்டு, திருவள்ளூர்,சேலத்தில் தலா 2 பேரும், கோவையில் 7 பேரும், அரியலூர்,காஞ்சிபுரம்,கரூர்,நாமக்கல் கடலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தி.மலை, தூத்துக்குடி, விழுப்புரம், வேலூரில் தலா ஒருவரும் என 35 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.


டிஸ்சார்ஜ்



இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 957பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதன்மூலம் அங்கு வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 1,97,751 ஆக அதிகரித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று கோவையில் 685 பேரும், சேலத்தில் 186 பேரும், செங்கல்பட்டில் 231 பேரும், திருவள்ளூரில் 171 பேரும், காஞ்சிபுரத்தில் 88 பேரும், கிருஷ்ணகிரியில் 43 பேரும், ஈரோடில் 106 பேரும், தஞ்சாவூரில் 72 பேரும், விழுப்புரத்தில் 91 பேரும், திருப்பூரில் 111 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.


மாவட்ட வாரியாக இன்றைய நிலவரம்


latest tamil news




latest tamil news





Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கருப்பட்டி சுப்பையா தேவர் - தூத்துக்குடி ,இந்தியா
28-அக்-202019:40:27 IST Report Abuse
கருப்பட்டி சுப்பையா தேவர் சென்னையில் கூட பாதியாக குறைந்துவிட்டது பாதிப்பு, ஆனால் தூத்துக்குடி யில் தொடர்ந்து தினமும் 40 கேஸ் வருது. எல்லாம் கிருப ..கிருப..கிருப..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X