தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் மகிழ்ச்சி:இலங்கை அமைச்சர் 'திமிர்'பேச்சு

Updated : அக் 28, 2020 | Added : அக் 28, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
கொழும்பு: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கப்பல் படை தாக்குதல் நடத்தியதாக வெளியான தகவல் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என இலங்கை அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா க பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இலங்கையின் கடற்தொழில் அமைச்சராக இருந்து வருபவர் டக்ளஸ்தேவானந்தா. இவர் இந்திய மீனவர்கள் மீது இலங்கை கப்படல் படைதாக்குதல் நடத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது

கொழும்பு: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கப்பல் படை தாக்குதல் நடத்தியதாக வெளியான தகவல் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என இலங்கை அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா க பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.



latest tamil news




இலங்கையின் கடற்தொழில் அமைச்சராக இருந்து வருபவர் டக்ளஸ்தேவானந்தா. இவர் இந்திய மீனவர்கள் மீது இலங்கை கப்படல் படைதாக்குதல் நடத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது கூறி உள்ளார். இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதை இந்தியா கட்டுப்படுத்த வேண்டும்.அவ்வாறுகட்டுப்படுத்தப்பட வில்லையெனில் இந்திய-இலங்கை மீனவர்களிடையே மோதல் உருவாகும். மேலும் இந்திய மீனவர்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது குறித்து இலங்கை கப்பல்படையிடம் அறிக்கை கேட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


latest tamil news



26ம் தேதி ராமேஸ்வரத்தில் இகுருந்து 650 விசைப்படகில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் இந்திய இலங்கை எல்லைப்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அன்று மாலை 5 அதிவேக படகில் ரோந்து வந்த இலங்கைகப்பல்படையினர் இந்திய மீனவர்களை விரட்டி அடித்தனர்.

தொடர்ந்து 60 விசைப்படகுகளை மடக்கி பிடித்த அவர்கள் மீனவர்கள் கடலில்வீசிய வலையை வெட்டி மூழ்கடித்தனர்.இலங்கை படையினர் திரும்பி சென்றதும் மீனவர்கள் மூழ்கிய வலையை மீட்க சென்றனர். இதனை கண்காணித்த இலங்கை வீரர்கள் அடுத்த சிலநிமிடங்களில் வந்து மீனவர்கள் மீது கற்களால் தாக்கினர். இதில் ராமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சிமடத்தை சேர்ந்த பூண்டி என்பவரது படகில் இருந்த மீனவர் சுரேஷ் காயம் அடைந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ramesh - chennai,இந்தியா
29-அக்-202013:10:41 IST Report Abuse
ramesh ஒரு நாள்போர்ருகே முடியாத நாடு .வாய் மட்டும் காது வரை இருக்கிறது
Rate this:
Cancel
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
29-அக்-202012:29:17 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலை இங்கிருக்கும் மத்திய ஆட்சியாளர்கள் தமிழனை இந்தியனாகவே கருதுவதில்லை.
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
29-அக்-202013:58:27 IST Report Abuse
Dr. Suriyaஅப்போ ஆண்ட மத்திய, மாநில ஆட்சியாளர்கள் கட்ச தீவு உரிமையையே தாரைவார்த்துவிட்டது தான் இவ்வளவுக்கும் காரணம் என்பது தெரியாதா? அவர்கள் தமிழனை இந்தியனாக கருதவில்லை என்று எடுத்து கொள்ளலாமா? அவர்கள் இப்போது ஆட்சியில் இருந்திருந்தால் இது ஒரு கொலையாக மாறியிருக்கும் என்பதாவது நியாபகம் வருகிறதா?...
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
29-அக்-202011:09:04 IST Report Abuse
Anand இங்குள்ள டுமீல் போராளிகளின் ரத்த உறவு இப்படி சொன்னால்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X