பொது செய்தி

இந்தியா

காஷ்மீரில் புதிய நில திருத்த சட்டம்: ஜம்மு தொழிலதிபர்கள் மோடிக்கு நன்றி

Updated : அக் 28, 2020 | Added : அக் 28, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
ஸ்ரீநகர்:ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களுக்கான நிலச் சட்டத்தில் திருத்தம் செய்துள்ள மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் ஜம்மு தொழிலதிபர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய, 370வது சட்டப் பிரிவை மத்திய அரசு, கடந்தாண்டு ரத்து செய்தது. ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என, இரு யூனியன் பிரதேசங்களாக

ஸ்ரீநகர்:ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களுக்கான நிலச் சட்டத்தில் திருத்தம் செய்துள்ள மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் ஜம்மு தொழிலதிபர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.



latest tamil news




ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய, 370வது சட்டப் பிரிவை மத்திய அரசு, கடந்தாண்டு ரத்து செய்தது. ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என, இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த யூனியன் பிரதேசங்களுக்கான நிலச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நிலையில், அவை உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.


latest tamil news




இந்நிலையில் நேற்று பி.பி.ஐ.ஏ., எனப்படும் தொழிலதிபர்கள் கூட்டமைப்பினர் வெளியிட்டுள்ள செய்தியில், புதிய நில சட்ட திருத்தம் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு கூட்டமைப்பு சார்பில் பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும் நன்றி. நில திருத்த சட்டத்தால் இரு யூனியன் பிரதேசங்களிலும், பல்வேறு துறைகளில் முதலீடுகள் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறியுள்ளனர்.

முன்னதாக ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டு இருந்ததால், நாட்டின் மற்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள், இங்கு நிலம் வாங்க முடியாத நிலை இருந்தது. தற்போது நாடு முழுதும் அமலில் உள்ள நிலச் சட்டங்களுடன் பொருந்தும்படி, புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. இந்திய குடிமகன் எவரும், ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன்பிரதேசங்களில், நிலம் வாங்குவதற்கானஅதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan_subramanian manian - Manama,பஹ்ரைன்
29-அக்-202012:46:01 IST Report Abuse
rajan_subramanian manian முதலில் வாங்குவது நம்ப உளுத்தம்பருப்புகளாக இருக்கும்.
Rate this:
Cancel
Rajkumar - Rajapalayam,இந்தியா
29-அக்-202008:39:39 IST Report Abuse
Rajkumar ஜம்மு தொழிலதிபர் கிடையாது (correction)......... big investor from other states specially corporate companies
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
29-அக்-202003:50:13 IST Report Abuse
J.V. Iyer கடைசியில் நாட்டின் ஒரு பகுதியாக காஷ்மீர். ஆஹா கனவு நனவாகிவிட்டது. பாஜக ஆட்சிக்கு இந்த ஒரு சாதனையே போதும். பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், சைனர்கள் ஆக்கிரமித்துள்ள லடாக் பகுதிகளையும் மீது இந்தியாவுடன் சேர்க்கவேண்டும். பலுசிஸ்தானை தனி நாடாக்க வேண்டும். மோடிஜி பாஜகவினால் முடியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X