பொது செய்தி

இந்தியா

16 'ரபேல்' விமானங்கள் இந்தியாவுக்கு வருகை

Updated : அக் 30, 2020 | Added : அக் 28, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி: 'அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள், 16 'ரபேல்' போர் விமானங்கள், இந்தியா வந்தடையும்' என, விமானப்படை அதிகாரி தெரிவித்தார்.கடந்த, 2016ம் ஆண்டு, ஐரோப்பிய நாடான பிரான்சிடம் இருந்து, 36 ரபேல் போர் விமானங்களை வாங்க, 59 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது.இதையடுத்து, கடந்த ஜூலை, 29ம் தேதி, முதல்கட்டமாக, ஐந்து ரபேல் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன.
16 'ரபேல்' விமானங்கள் இந்தியாவுக்கு வருகை

புதுடில்லி: 'அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள், 16 'ரபேல்' போர் விமானங்கள், இந்தியா வந்தடையும்' என, விமானப்படை அதிகாரி தெரிவித்தார்.

கடந்த, 2016ம் ஆண்டு, ஐரோப்பிய நாடான பிரான்சிடம் இருந்து, 36 ரபேல் போர் விமானங்களை வாங்க, 59 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது.இதையடுத்து, கடந்த ஜூலை, 29ம் தேதி, முதல்கட்டமாக, ஐந்து ரபேல் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன. இவை, கடந்த செப்டம்பர், 10ம் தேதி, முறைப்படி இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டன.

இந்நிலையில், அடுத்தகட்ட விமான வினியோகம் குறித்த தகவல்கள், தற்போது வெளியாகி உள்ளன. இது குறித்து, விமானப்படை அதிகாரி ஒருவர் கூறியதாவது:அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள், பிரான்சில் இருந்து, 16 ரபேல் போர் விமானங்கள், இந்தியாவுக்கு வந்துவிடும். வரும் நவம்பர், 5ம் தேதி, மூன்று ரபேல் விமானங்கள்,
இந்தியா வரவுள்ளன. அடுத்த ஆண்டு ஜனவரியில், மூன்று; மார்ச் மாதத்தில், மூன்று மற்றும் ஏப்ரல் மாதத்தில், ஆறு ரபேல் விமானங்களும் வந்துவிடும்.இதன்மூலம், 2021 ஏப்ரல் மாதம், இந்திய விமானப் படையில் இருக்கும் ரபேல் விமானங்களின் எண்ணிக்கை, 21 ஆக உயர்ந்துவிடும்.
இதில், 18 விமானங்கள், விமானப் படையின், 'கோல்டன் அரோசிஸ்' என்ற, 17வது படைப் பிரிவில் அங்கம் வகிக்க உள்ளன.மீதமுள்ள, மூன்று விமானங்கள், மேற்கு வங்கத்தின் ஹஷிமாரா விமானப் படை தளத்தில் நிறுத்திவைக்கப்படவுள்ளன. கிழக்கு எல்லைப் பகுதியில் இருந்து சீனாவின் அச்சுறுத்தல் ஏற்பட்டால், அதை முறியடிக்க, இந்த விமானங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
29-அக்-202020:37:45 IST Report Abuse
Mirthika Sathiamoorthi மேக் இன் இந்தியா அசெம்பில் இன் இந்தியா சுயசார்பு? அதெல்லாம் எதுக்கிப்ப
Rate this:
Cancel
stb -  ( Posted via: Dinamalar Android App )
29-அக்-202016:49:29 IST Report Abuse
stb அப்போ சீனா உடனான போரை மே முதல் வாரத்தில் ஆரம்பிக்கலாம்
Rate this:
Cancel
kumaresan - Petaling Jaya,மலேஷியா
29-அக்-202014:56:36 IST Report Abuse
kumaresan இவையெல்லாம் , இது போன்றவையெல்லாம் காங்கிரஸ் ஆட்சியின் பொழுதே வாங்க பட்டிருக்க வேண்டியவை.. அப்பொழுதிலேயிருந்தே நாட்டின் இறையாண்மைக்கு சீனா பாக்கிஸ்தான் மூலம் அசச்சுறுத்தல் இருந்தது, எனோ தெரியவில்லை அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர் மட்டும் தான் அவர்களின் அறிவுக்கு புலப்பட்டது வாழ்க மோடி ஜி , வாழ்க பாரதம். காங்கிரஸுக்கு ராஜிவ் அறக்கட்டளை மட்டும் தான் புலப்பட்டது ஒழிக குடும்ப அரசியல் . ஒழிக காந்தி குடும்பத்தின் "அரச ஆட்சி". ஒழிக கண்மூடித்தனமான காங்கிரஸ் ஆதரவு .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X